நேரியல் கோப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கணிதத்திலும், கணிதத்தின் எல்லா பயன்பாடுகளிலும், நேரியல் கோப்பு, நேரியல் உருமாற்றம், நேரியற்செயலி, நேரியற்செயல்முறை(linear map, transformation, operator) என்ற கருத்து அடிப்படையானது. பல அறிவியல் பயன்பாடுகளிலும், ஏறத்தாழ எல்லா சமுதாயவியல், மருத்துவவியல், உயிரிய-தொழில்நுட்பவியல் பயன்பாடுகளிலும், நேரியல் கோப்புக்குரிய சூழ்நிலை தானாக இல்லாவிட்டாலும், எவ்வளவு தூரம் நேரியல் பண்புகளுடையதாக அச்சூழ்நிலையை மாற்றமுடியும் என்றே ஆராய்ச்சியாளர்கள் முயல்வார்கள். நேரியல் அல்லாத (non-linear) பயன்பாடுகளிலும் நேரியல் சூழ்நிலைக்குத் தோராயப் படுத்துவதே முதல் முயற்சி. ஆக, நேரியல் அல்லாத பயன்பாடுகளிலும் நேரியல் இயற்கணிதச் செயல்பாடுகளே அடிப்படையில் தேவைப்படுவதால், நேரியல் கோப்பு என்பது முழு கணித உலகத்திலும் இன்றியமையாததாகிறது.
பொருளடக்கம் |
[தொகு] வரையறை
U, V இரு திசையன் வெளிகள், இரண்டுக்கும் அளவெண் களங்கள் ஒன்றே என்று கொள்வோம்.
கீழ்க்கண்ட இரண்டு நிபந்தனைக்குட்பட்டால், ஒரு நேரியல் கோப்பு (உருமாற்றம், செயல்முறை) எனப்படும்:
- (நே.கோ.1): u1,u2 இரண்டும் U இல் எதுவாக இருந்தாலும் T(u1 + u2) = T(u1) + T(u2) ;
- (நே.கோ.2): U இலுள்ள எல்லா u க்கும், எல்லா அளவெண்கள் α க்கும், T(αu) = αT(u).
இங்கு, T ஐப்பற்றின அரையில், U அரசு வெளி (Domain Space) என்றும், V பிம்ப வெளி (Image space) என்றும் சொல்லப்படும்.
அளவெண் களம் ஐக்குறிப்பிட்டுச்சொல்லவேண்டியிருந்தால், நேரியல் (கோப்பு) என்று சொல்வோம்.
[தொகு] வரையறையைப்பின்பற்றிய உடன்விளைவுகள்
-
- T(α1u1 + α2u2 + ... + αnun) = α1T(u1) + α2T(u2) + ... + αnT(un),. இங்கு α க்களெல்லாம் அளவெண்கள், எல்லா u க்களும் U விலுள்ள உறுப்புகள்.
-
- U வின் ஏதாவதொரு அடுக்களத்தின் உறுப்புகளை T எங்கு எடுத்துச்செல்கிறதோ அதைப்பொருத்து முழு T இன் பண்புகளும் தீர்மனிக்கப்படுகின்றன.
[தொகு] குறிப்பிடத்தக்க இரு நேரியல்கோப்புகள்
- U விலுள்ள ஒவ்வொரு u க்கும், என்று வரையறுக்கப்பட்டால் சூனியக்கோப்பு எனப்பெயர் பெறும்.
- U விலுள்ள ஒவ்வொரு u க்கும், T(u) = u என்று வரையறுக்கப்பட்டால் முற்றொருமைக்கோப்பு எனப்பெயர் பெறும். அதற்குக்குறியீடு IU.
- அதனால் U விலுள்ள ஒவ்வொரு u க்கும், IU(u) = u.
[தொகு] எடுத்துக்காட்டுகள்
கீழேயுள்ளவை நேரியல் கோப்புகள்:
-
- . வரையறை: T(x,y,z) = (x,y, − z). இது எல்லா புள்ளிகளையும் xy-தளத்தில் பிரதிபலிக்கிறது.
-
- வரையறை: இலுள்ள ஒவ்வொரு p க்கும் T(p) = p(0).
-
- வரையறை: (a,b) இலுள்ள எல்லா x க்கும்,
- T(p)(x) = xp(x).
-
- . வரையறை: T(x,y) = (0,y − x).
-
- வரையறை: இலுள்ள ஒவ்வொரு p க்கும் T(p) = p'.
- இங்கு p' என்பது p இன் வகைக்கெழு. இது வகையீட்டு (நேரியல்) கோப்பு எனப்படும்.
-
- . வரையறை: D(f) = f'.f' என்பது f இன் வகைக்கெழு. D க்கு வகையீட்டு செயல்முறை (Differential Operator) எனப்பெயர்.
-
- வரையறை: . க்கு தொகையீட்டு செயல்முறை (Integral Operator) எனப்பெயர்.
-
- வரையறை: . இது ஒரு -நேரியல் கோப்பு.
-
- இங்கு A மெய்யெண்களாலான ஒரு அணி. வரையறை: இலுள்ள ஒவ்வொரு u க்கும் LA(u) = Au.
- (Au என்பது அணிப்பெருக்கல்).
கீழேயுள்ளவை நேரியல் கோப்புகள் அல்ல:
-
- ஐ U இல் ஒரு குறிப்பிட்ட திசையனாகக்கொள். : வரையறை: U விலுள்ள ஒவ்வொரு x க்கும்
- T(x) = x + u0. இதற்கு நகர்த்தல் கோப்பு (Translation operator)எனப்பெயர்.
-
- . வரையறை: T(x,y) = (x2,y2)
-
- வரையறை: . இங்கு அளவெண்களத்தை ஆக எடுத்துக்கொண்டால் , இது ஒரு -நேரியல் கோப்பு அல்ல. ஏனென்றால் நே. கோ.2 தவறுகிறது.
[தொகு] நேரியல் கோப்பின் வீச்சு, சுழிவு / உட்கரு)
- திசையன்வெளிகள், T நேரியல் கோப்பு.
- அ-து, T இன் எல்லா பிம்பங்களும் சேர்ந்த கணம். இதற்கு T இன் வீச்சு (Range of T) என்று பெயர்.
- அ-து, V இலுள்ள சூனியத் திசையனுக்கு T யால் எடுத்துச் செல்லப்படும் எல்லா U-உறுப்புகளும் சேர்ந்த கணம். இதற்கு T இன் சுழிவு (Null space of T / kernel of T) அல்லது உட்கரு என்று பெயர்.
- வீச்சு, சுழிவு இரண்டுமே சம்பந்தப்பட்ட திசையன் வெளிகளின் உள்வெளிகள்.
[தொகு] அமைவியங்கள்
இரண்டு கணித அமைப்புகளுக்கிடையே அவைகளுக்குள்ள ஏதோ ஒரு அமைப்பை சிதறாமல் காக்கும் ஒரு கோப்புக்குப் பொதுப்பெயர் அமைவியம்.அது எந்த அமைப்பைக்காக்கிறதோ அதைப்பொருத்து அதனுடைய பெயரும் மாறுபடும்.
- திசையன்வெளிகள், T நேரியல் கோப்பு. ஆகவும் இருந்தால், T க்கு ஒரு அணிக்குறிகாட்டி (Matrix representation) இருக்கும். அவ்வணியை M என்று குறிப்போம்.
-
- வெளி அமைவியம் (epimorphism): T ஒரு முழுக்கோப்பானால் (onto map, surjective map), அ-து, R(T) = V ஆக இருந்தால், T ஒரு வெளி அமைவியம் எனப்படும். இந்த பட்சத்தில், M இனுடைய நிரல்களின் அளாவல் V ஆக இருக்கும்.
-
- ஒன்றமைவியம் (monomorphism): T ஒரு ஒன்றுக்கொன்றான இயைபுடைய கோப்பாக (one-one map, injective map)இருந்தால், அ-து, Uக்கும் R(T) க்கும் ஒன்றுக்கொன்றான இயைபை ஏற்படுத்தினால்,T ஒரு ஒன்றமைவியம் எனப்படும். இந்த பட்சத்தில், M இனுடைய நிரல்கள் நேரியல் சார்பற்றதாக இருக்கும்.
-
- சம அமைவியம் (isomorphism): T ஒரு வெளி அமைவியமாகவும், ஒன்றமைவியமாகவும் இருந்தால் அது சம அமைவியம் எனப்படும். இந்த பட்சத்தில்M இனுடைய நிரல்கள் V க்கு ஒரு அடுக்களமாக அமையும்.
-
- உள் அமைவியம் (endomorphism): ; அ-து, அரசு வெளியும் பிம்ப வெளியும் ஒன்றாகவே இருந்தால், T ஒரு உள் அமைவியம் எனப்படும். இப்பொழுது M ஒரு சதுர அணியாக இருக்கும்.
-
- தன்னமைவியம் (automorphism): , அ-து, T ஒரு உள் அமைவியம்; மேலும் அது ஒரு சம அமைவியமாகவும் இருந்தால், T ஒரு தன்னமைவியம் எனப்படும். இந்த பட்சத்தில் M ஒரு வழுவிலா அணி (non-singular matrix) யாக இருக்கும்.