விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் 27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 1964 - ஐக்கிய அமெரிக்காவின் சரித்திரத்தில் மிகப் பெரிய 9.2 ரிக்டர் நிலநடுக்கமும் அதையடுத்த ஆழிப்பேரலையும் பெரிய வெள்ளியன்று அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர். அன்கரேஜ் என்ற நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது.
- 1968 - விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் (படம்) விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.
- 1969 - நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.