See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
எர்வின் சுரோடிங்கர் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

எர்வின் சுரோடிங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

எர்வின் சுரோடிங்கர்
Erwin Schrödinger

எர்வின் ருடோல்ஃப் ஜோசெப் அலெக்சாண்டர் சுரோடிங்கர் (1887-1961)
பிறப்பு ஆகஸ்ட் 12 1887
ஏர்ட்பர்க், வியன்னா, ஆஸ்திரியா-ஹங்கேரி
இறப்பு ஜனவரி 4 1961 (அகவை 73)
வியன்னா, ஆஸ்திரியா
இடம் ஆஸ்திரியாவின் கொடி ஆஸ்திரியா
Flag of Ireland அயர்லாந்து
குடியுரிமை Flag of Ireland ஐரிஷ்
தேசியம் ஆஸ்திரியாவின் கொடி ஆஸ்திரியன்
இனம் ஆஸ்திரியாவின் கொடி ஆஸ்திரியன்-இங்கிலாந்தின் கொடி ஆங்கிலேயன்
பல்கலைக்கழகம் வியன்னா பல்கலைக் கழகம்
Academic advisor   பிரீட்ரிக் ஹாசனோர்ல்
அறியப்படுவது சுரோடிங்கர் சமன்பாடு
சுரோடிங்கரின் பூனை
சுரோடிங்கர் முறை
Schrödinger functional
Schrödinger picture
சுரோடிங்கர்-நியூட்டன் சமன்பாடு
Schrödinger field
Rayleigh-Schrödinger perturbation
Schrödinger logics
Cat state
மதம் கத்தோலிக்கம்[1]
ஒப்பம் எர்வின் சுரோடிங்கர்'s signature

எர்வின் ருடோல்ஃப் ஜோசெப் அலெக்சாண்டர் சுரோடிங்கர் (Erwin Schrödinger; ஆகஸ்ட் 12, 1887 - ஜனவரி 4, 1961) ஒரு ஆஸ்திரிய-ஐரிய இயற்பியலாளர் ஆவார். குவாண்டம் பொறிமுறைக்கு ஆற்றிய பங்களிப்பினால் இவருக்குப் பெரும் புகழ் கிடைத்தது. இப்பங்களிப்புக்காக 1933 ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டில், இவரது தனிப்பட்ட நண்பரான அல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பின்னர் சுரோடிங்கரின் பூனை எனப்படும் சிந்தனைச் சோதனையை முன்வைத்தார்.


[தொகு] தொடக்க காலம்

சுரோடிங்கர் 1887 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிறந்தார். இவரது தந்தையார் ருடோல்ஃப் சுரோடிங்கர், தாய் ஜோர்ஜைன் எமிலியா பிரெண்டா. தாய் ஆஸ்திரிய, ஆங்கிலேயக் கலப்பில் பிறந்தவர். சுரோடிங்கரின் வீட்டில் ஆங்கிலமும், ஜேர்மன் மொழியும் பேசப்பட்டதால் இவர் இரண்டையுமே ஒரே நேரத்தில் கற்றுக்கொண்டார். 1898 ஆம் ஆண்டில் இவர் அக்கடமிஸ்செஸ் ஜிம்னாசியம் என்னும் பள்ளியில் படித்தார். 1906 ஆம் ஆண்டுக்கும் 1910 ஆம் ஆண்டுக்கும் இடையில் இவர் வியன்னாவில் "பிரான்ஸ் செராபின் எக்ஸ்னர்" என்பவரின் கீழும், "பிரீட்ரிக் ஹசனோர்ல்" என்பவரின் கீழும் கல்வி பயின்றார். இவர் பிரடெரிக் கோல்ரவுஸ்ச் என்பவருடன் சேர்ந்து சோதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். 1911 ஆம் ஆண்டில் இவர் எக்ஸ்னருக்கு உதவியாளரானார்.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -