Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
வாழை - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

வாழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வாழை
Banana plant
Banana plant
அறிவியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
நிலைத்திணை
பிரிவு: பூக்கும் நிலைத்திணை
வகுப்பு Liliopsida
வரிசை: Zingiberales
குடும்பம்: Musaceae
பேரினம்: Musa

வாழை மரம் உண்மையில் தாவரவகைப்படுத்தலின் படி ஒரு சிறுசெடியாகும் (herb). வாழையின் அறிவியல் பெயர் Musa spp. வாழை தென் கிழக்கு ஆசியாவில் தோன்றியது. வாழைமரம் 8 மீ உயரம் வரை வளரக்கூடியது. அதன் பெரிய இலைகள் 3 மீ நீளம் வரை இருக்கும். வாழைப்பழம் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நீளமாக இருக்கும். வழைப்பழங்கள் வாழைக்குலையில் வரிசையாக கொத்துகொத்தாய் அமைந்திருக்கும். ஒவ்வொர்ரு கொத்தும் 'சீப்பு' (ஆங்கிலத்தில் hand) என்றும், பல சீப்புகளைக்கொண்ட முழு வாழைக்கொத்து 'குலை' அல்லது 'தார்' (ஆங்கிலத்தில் stem) என்று அழைக்கப்படுகிறது.

2002 ஆம் ஆண்டு, 6,80,00,000 டன் வாழைப்பழங்கள் விளைவிக்கப்பட்டு 1,20,00,000 டன் ஏற்றுமதி செய்யப்பட்டது. உலக வாழை உற்பத்தியில் இந்தியா (24%), ஈக்வடார் (9%), பிரேசில் (9%) ஆகிய நாடுகள் முன்னனி வகிக்கின்றன.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

தென் கிழக்கு ஆசியாவில் தான் வாழை முதன் முதலாக பயிர் செய்யப்பட்டது. இப்போதும், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினியா நாடுகளில் காட்டு வாழைகளைக் காணலாம். நியூ கினியாவின் குக் சகதிப்பகுதியில் (Kuk swamp) நடந்த அகழ்வாராய்ச்சிகளின் படி அங்கு வாழை குறைந்தது கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 முதலோ பயிரப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.

வாழை பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு 600 ஆம் ஆண்டு புத்த மத ஏடுகளில் காணப்படுகிறது. மாமன்னர் அலெக்ஸாந்தர் இந்தியாவில் கி.மு 327 இல் இந்தியாவில் வாழைப்பழத்தை சுவைத்ததற்கான குறிப்புகல் உள்ளன. கி.பி 200 ஆம் ஆண்டில் சீனாவில் ஒழுங்குபடுத்திய வாழை சாகுபடி நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கி.பி 650இல் முகலாயர்கள் இந்தியாவிலிருந்து வாழையை மத்திய கிழக்குப் பகுதிக்கு கொண்டுவந்தனர். அரேபிய வியாபாரிகள் வாழையை ஆப்பிரிக்காவெங்கும் பரப்பினர். அமெரிக்காவிற்கு வாழை வந்தது போர்ச்சுகீசிய வியாபாரிகள் மூலமாகும்.

வழையின் ஆங்கிலப்பெயர் 'பனானா' (banana) தோன்றியது ஸ்பானிஷ் அல்லது போர்ச்சுகீசிய (மூலம்: வொலோஃப் என்ற ஆப்பிரிக்க மொழி) மொழியிலிருந்து இருக்கலாம். இருப்பினும், வாழையின் அறிவியல் பெயரான 'மூசா' (Musa), அரபுப்பெயரிலிருந்து வந்திருக்கலாம்.

[தொகு] வாழைச் சாகுபடி

உலகில் இருவகையான வாழைகள் உள்ளன. காயாக சமையலுக்கு பயன்படுவது வாழைக்காய் (plantain), பழமாக உண்ணப்படுவது வாழைப்பழம் (banana). பழ வகைகளில் வாழை மட்டுமே ஒருவிதையிலைத்தாவரமாகும்; மற்ற பழங்கள் இருவிதையிலைதாவரங்களாகும். பழவகை வாழை நல்ல திரண்ட உருளை வடிவ பழங்களைக் கொண்டிருக்கும். காய்வகை வாழைகள் சற்று கூரான பக்கங்களுடன் இருக்கும்.

மனிதன் முதலில் பயன் படுத்திய காட்டுவாழைகளில் பல விதையுடன் இருந்தன. இவற்றுள், முக்கியமானது Musa acuminata ஆகும். இந்தியாவில் மூதாதைய காட்டுவாழைகள் (Musa balbisiana) விதையுடன் இருந்தன. ஆனால், இவை பூச்சி மற்றும் நோய் தாங்கும் குணமுடையவை. இயற்கையாகவே இவ்விரு சிற்றினங்களும் கலந்து விதைகலற்ற நற்குணங்களுடன் முப்படை மரபணுத்தாங்கிகளுடைய வாழை இனங்கள் உருவாயின (Musa X sapientum). பின்னர், இவை நிலத்தடி வாழைக்கிழங்கு மூலம் இனவிருத்தி செய்யப்பட்டன.

தற்போது வாழை இனங்கள் தங்களின் மூல சிற்றினங்களை குறிக்கும் விதமாக AA, BB, AB, AAA, AAB, ABB அல்லது BBB என அழைக்கபடுகின்றன. இக்குறியீட்டில், A என்பது M.acuminata ஐயும் B என்பது M.balbisiana ஐயும் குறிக்கும். அதிக அளவில் B மரபணுப்பொருள் கொண்ட வாழைகள் பெரும்பாலும் 'வாழைக்காய்' இனத்தையும், அதிக அளவில் A மரபணுப்பொருள் கொண்ட வாழைகள் பெரும்பாலும் 'வாழைப்பழ' இனத்தையும் சேரும்.

[தொகு] தட்பவெட்ப்பம்

நீர் அதிகம் கிடைக்கும், பூமத்தியரேகைப்பகுதிகளில் வாழை நன்றாக வளரும். வெப்பனிலை 20 - 30 'C இருப்பது நல்லது. 10 'C க்கும் கீழே வாழை வளர்ச்சி நின்றுவிடும். உறைபனி வாழை மரத்தைக் கொன்று விடும். ஆனால், நிலத்தடி கிழங்கு சாதாரணமாக உறைபனியைத்தாங்கும். மற்ற காரனிகளை விட, காற்று தான் வாழை விவசாயியின் முக்கிய பிரச்சினை. மணிக்கு 30 - 50 கி.மீ வேகமன காற்று வழை இலைகளையும், சில சமயம் வழைக்குலையையும் உடைத்துவிடும்; 60 - 100 கி.மீ வேகக்காற்றில் மரங்கள் முறிந்து சாய்ந்து வாழைத்தோட்டமே சீர்குலைந்து விடும்.

வாழை பலவிதமான மண்வகைகளில் வளரும் தன்மையுடையது. ஆனால், நல்ல வடிகால் வசதி தேவை; நிலம் சற்றே அமிலத்தன்மையுடன் இருப்பது அவசியம் (PH 6.0). நீர் தேங்கக்கூடிய நிலமாக இருப்பின், உயர்த்தப்பட்ட வரப்புகளில் வாழை நடலாம்.

[தொகு] வாழைக்கன்றுகள்

வாழைக்கன்றுகள் வாழைக்கிழங்கிலிருந்து உருவாக்கபடுகின்றன. கிழங்கின் ஒவ்வொரு முளையும் சுற்றியுள்ள கிழங்குப்பகுதியுடன் துண்டாக்கப்பட்டு தனிக்கன்று வளர்க்கப்படுகிறது. நடுமுன், இம்முளைகள் வெந்நீரிலும், பூச்சி மருந்துகளிலும் நனைக்கப்பட்டு சுத்தமாக்கபடுகின்றன. திசு வளர்ப்பு முறையிலும் இப்போது வாழைக்கன்றுகள் உருவாக்கப்படுகின்றன. சில விவசாயிகள் முழுக்கிழங்கைய்ம் நடுகின்றனர். இது விரைவில் காய்க்கும் மரத்தைத் தரும்; இருப்பினும் இவற்றில் கிழங்கு மூலம் பூச்சிகளும் நோய்களும் பரவும் வாய்ப்பு அதிகம்.

[தொகு] தோட்டம் அமைத்தல்

வாழைத்தோட்டங்களில் கன்றுகள் இரகத்தை பொருத்து ஏக்கருக்கு 400 - 800 வீதம் நடப்படுகின்றன. வளர்ந்த பின் நிலத்தில் வெயில் படாதவாறு நெருக்கமாக நடுவது, களை வளர்வதைத் தடுக்கும். முளைக்கும் போது ஒரு கிழங்குக்கு இரு குருத்துகள் மட்டுமே வளரவிடப்படுகின்றன. ஒன்று பெரியதாகவும், மற்றது 6 - 8 மாதங்களுக்குப் பின் பழம் தரவல்லதாயும் விடப்படுகின்றன. இவ்வாறு, ஒரே கிழங்கிலிருந்து தொடர்ந்து வருடாவருடம் வேறு குருத்துக்கள் வளர்வதால் சில ஆன்டுகள் கழித்து முன்பு நட்ட இடத்திலிருந்து மரங்கள் சில அடி தூரம் தள்ளி இருக்கும்.

காற்றினாலோ,வாழைக்குலையைத் தாங்க முடியாமலோ மரங்கள் சாய்வதைத் தடுக்க இரு மரங்கள் ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டப்படுவதுண்டு.

[தொகு] அழிக்கும் பூச்சிகளும் நோய்களும்

வாழை மரங்கள் கலப்பின விருத்தியில்லாமல் இனப்பெருக்கம் செய்வதால், பல்வேற் வகையான நோய் எதிர்ப்பு மரபணுக்கள் ஒரே இரக வாழையில் இருப்பதில்லை. எனவே வாழை மரங்கள் பல நோய்களால் எளிதில் தாக்கப்படுகின்றன.

கறுப்பு சிகடோகா, பனாமா நோய் ஆகிய பூஞ்சை நோய்கள் வாழையைத்தாக்கும் முக்கியமான நோய்களாகும்.ஃபியூசாரியம் எனும் பூஞ்சையால் உண்டாகும் பணாமாவாடல் நோய் 1950 களில் க்ரோஸ் மைகேல் எனும் வாழை இனத்தையே அழித்தி விட்டது. கறுப்பு சிகடோகா நோய் 1960 களில் ஃபிஜி தீவுகளிலிருந்து ஏற்றுமதியன வாழைப்பழத்தை சுற்ற பயன் படுத்திய இலைகள் மூலம் ஆசியாவெங்கும் பரவியது.

கிழங்கு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுவதால் நச்சுரி நோய்களும் எளிதில் பரவுகின்றன. நுனிக்கொத்து நோய் வாழையை அழிக்கும் முக்கியமன நச்சுரி நோயாகும். நோய் தொற்றிய மரங்களை அழித்து எரிப்பதும், நோயைப்பரப்பும் பூச்சிகளை அழிப்பதுமே இதற்கு தீர்வாகும்.

[தொகு] அறுவடை

பழங்கள் முக்கால்வாசி முற்றிய நிலையில் அறுவடை செய்யப்படுகின்றன. பொதுவாக, முதல் சீப்பு தோன்றிய மூன்று மாதங்களில் வாழைதார் அறுவடைக்கு தயாராக இருக்கும். அறுவடையின் போது முழு வாழைத்தாரும் வெட்டப்பட்டு கம்பிகளில் தொங்கவிட்டு தோட்டத்திலிருந்து எடுத்து செல்லப்படுகிறது. உள்நாட்டு சந்தைக்கு தார்கள் அப்படியே விற்கப்படுகின்றன. ஏற்றுமதிக்கான வாழைகள் சீப்புகளாக வெட்டப்பட்டு, வாழைப்பால் கரையை நீக்க 'பிளீச்' (சோடியம் கைப்போக்ளொரைட்) கரைசலில் நனைக்கப்படுகின்றன. பின்னர் அவை பத்திரமாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகளில் அடுக்கப்படுகின்றன. தேவைப்படும்போது, எத்திலீன் வாயு மூலம் பழுக்க வைக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராகின்றன.

வளரும் நாடுகளில், சில இடங்களில் எத்திலீன் வாயுக்கு பதில் அதே குணமுடைய் ஆனால் தீப்பற்றும் அபாயமுடைய அசிட்டிலீன் வாயு அல்லது கால்சியம் கார்பைட் பழம் பழுக்க வைக்க பயன் படுத்தப்படுகிறது. இது மிக அபாயகரமான பழக்கமாகும்.

வழைப்பழங்கள் 12 'C க்கும் குறைவான வெப்பனிலையில் கருக்கத்துவங்கிவிடும். எனவே முழு வழைப்பழங்களை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பது நல்லதல்ல. உரித்த வாழைப்பழங்களை காற்றுப்புகாதவாறு உறைகுளிர் பெட்டியில் நெடுநாட்கள் வைத்திருக்கலாம்.

[தொகு] பயன்பாடு

வாழைப்பழம் பெரும்பாலும் அப்படியே உண்ணப்படுகிறது. சமீபமாக, பாலுடன் கலந்து கூழாகவும் பருகப்படுகிறது; ஐஸ் கிரீம், குழந்தைகள் உணவு மற்றும் பழக்கலவைகளில் பயன் படுத்தப்படுகிறது. பழத்தை உலர வைத்து பொடியாக்கி, மாவுகளுடன் கலந்து பேக்கரி வகை உணவுகள் செய்யப்படுகின்றன.

வாழைக்காய் மற்றும் வாழைப்பத்தை மெல்லிய துண்டுகளாக சீவி, வாழை வறுவல் செய்யப்படுகிறது. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவை சமையலுக்கு பயன் படுத்தப்படுகின்றன. வாழைத்தண்டு சிறுநீர் பாதையில் ஏற்படும் கற்களை நீக்க வல்லது என நம்பப்படுகிறது.

வாழை இலை இந்தியாவில் உணவு உண்ணும் தட்டு போல பயன் படுகிறது.

அறுவடைக்குப்பின் எஞ்சியிருக்கும் வாழைமரங்கள் வெட்டி நிலத்தில் சாய்த்து மக்க விடப்படுகின்றன. வாழை மரத்தண்டுகள் உரங்களை சேமித்து வைத்திருப்பதால், இவை நல்ல உரமாகப்பயன் படுகின்றன.

[தொகு] வாழைப்பழ வகைகள்

  1. செவ்வாழை (சிகப்பு நிறத்திலிருக்கும் சற்று பெரிய அளவில் இருக்கும்)
  2. ரஸ்தாழி(லி?)
  3. கற்பூரவல்லி
  4. மழைவாழை
  5. பேயன் பழம்
  6. மொந்தம் பழம்
  7. பச்சை வாழைப்பழம் (பச்சை நிறத்தில் இருக்கும்)
  8. பெங்களூர் பச்சை வாழைப்பழம் (பெங்களூர் பச்சை என்றாலும் கலர் மஞ்சல் நிரத்தில் தான் இருக்கிறது)
  9. நேந்திர வாழை (கேரளாவில் உற்பத்தியாகின்றன)
  10. பூவன் பழம்

[தொகு] மருத்துவ குணங்கள்

வாழைப்பழம் பசியை ஆற்றுவதோடு பல்வேறு மனித உபாதைகளுக்கு மருந்தாக இருக்கிறது. குறிப்பாக மொந்தம் பழம் போன்றவை மலச்சிக்கலுக்கு நல்லது. குழந்தைகளுக்கு சிறுவயதில் ஏற்படும் பல் விழும் காலங்களில் ஆடிக்கொண்டிருக்கும் பல்லை, பிடுங்குவதற்கு பதிலாக பெரிய அளவிலான வாழைப்பழம் (மொந்தம் அல்லது ரஸ்தாழி) போன்றவைகளை வழுக்கட்டாயமாக கொடுப்பர். பல் வாழைப்பழத்துடன் சேர்ந்து வயிற்றில் சென்று பிறகு மலத்துடன் வெளியேறிவிடும்.

[தொகு] கலாசார முக்கியத்துவம்

வாழைப்பழங்கள் இந்து கடவுள்களின் வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகிறது. பண்டைய இந்தியாவில் வாழை கடவுள்களின் உணவாக கருதப்பட்டது.குறிப்பாக தென்னிந்தியாவில் வாழை இலைகளும் இறைவழிபாட்டில் பயன் படுத்தப்படுகின்றன. விருந்தாளிகளுக்கு வாழை இலையில், குறிப்பாக தலை வாழை இலையில் (நுனி இலை) உணவு படைப்பது சிறந்த தமிழ் பண்பாடு.

[தொகு] வெளியிணைப்புகள்

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com