See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
பிரதிபா பாட்டீல் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பிரதிபா பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பிரதிபா பாட்டீல்
பிறந்த நாள்: டிசம்பர் 19, 1934
பிறந்த இடம்: மகாராஷ்டிரா
இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவி வரிசை: 12ஆவது குடியரசுத் தலைவர்
பதவி ஏற்பு: ஜூலை 25, 2007
பதவி நிறைவு: --
முன்பு பதவி வகித்தவர்: முனைவர் அப்துல் கலாம்
அடுத்து பதவி ஏற்றவர்: -

பிரதிபா பாட்டீல் (மராத்தி:प्रतिभा पाटिल, பிறப்பு: டிசம்பர் 19, 1934; பரவலான அழைப்புப் பெயர்: பிரதிபா தாயி, Pratibhaa taai प्रतिभा ताई) இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார். அத்துடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது குடியரசுத் தலைவரும் ஆவார் [1]. இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான இவர் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ஆவார். ஜூலை 19, 2007இல் நடந்த குடியாராசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு இவருக்கு எதிராகப் போட்டியிட்ட பைரன் சிங்க் ஷெகாவத் அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.[2].

மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் பிரதிபா பாட்டீல் பிறந்தார். அவரின் தந்தை பெயர் ஸ்ரீ நாராயண ராவ். ஜல்கானில் உள்ள எம். ஜே. கல்லூரியில் முதுகலைமானி (எம். ஏ.) பட்டம் பெற்றார். பின்னர் அவர் மும்பையில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்று வக்கீலாகவும் பயிற்சி பெற்றார்.

மகாராஷ்டிரா மாநில அவையில் உறுப்பினராக 1962 முதல் 1985 வரை இருந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் 1991 முதல் 1996 வரையில் இருந்தவர்.2004 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் மாநில ஆளுநராக பணியாற்றுகிறார்.


[தொகு] வெளி இணைப்புகள்

[தொகு] உசாத்துணை

  1. "Patil's victory is landmark event in Maharashtra's history: Deshmukh", UNI. 22 ஜூலை 2007 அன்று தகவல் பெறப்பட்டது. 
  2. அனிதா ஜோஷுவா. "High turnout in Presidential poll", த ஹிண்டு. 20 ஜூலை 2007 அன்று தகவல் பெறப்பட்டது. 


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -