திருச்சிராப்பள்ளி மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் | |
திருச்சிராப்பள்ளி மாவட்டம்:அமைந்த இடம் |
|
தலைநகரம் | திருச்சிராப்பள்ளி |
மிகப்பெரிய நகரம் | திருச்சிராப்பள்ளி |
மாவட்ட ஆட்சியர் |
[[]] |
ஆக்கப்பட்ட நாள் | |
பரப்பளவு | 4403.83 கி.மீ² (?வது) |
மக்கள் தொகை (2001) அடர்த்தி |
2,418,366 (?வது) 549/கி.மீ² |
வட்டங்கள் | |
ஒன்றியங்கள் | |
நகராட்சிகள் | |
கிராம பஞ்சாயத்துகள் | |
சிறப்பு கிராம பஞ்சாயத்துகள் | |
திருச்சிராப்பள்ளி மாவட்டம் (ஆங்கிலம்:Tiruchirappalli district), இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் திருச்சி ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
தென்னகத்தின் மத்தியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால், தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட அத்தனைப் பேரரசுகளின் ஆதிக்கத்திலும் பரந்தும் குறுகியும் இம்மாவட்டம் விளங்கியது. சேர, சோழ, பாண்டியர்களாலும், விஜய நகரப் பேரரசாலும் பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின. 1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974-இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30-ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
[தொகு] எல்லைகள்
வடக்கில் பெரம்பலூர் மாவட்டத்தையும், கிழக்கில் பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களையும், தெற்கில் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களையும், வட மேற்கில் நாமக்கல் மாவட்டத்தையும், மேற்கில் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களையும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
[தொகு] நிர்வாகம்
[தொகு] வட்டங்கள்
- மணப்பாறை
- ஸ்ரீரங்கம்
- திருச்சிராப்பள்ளி
- இலால்குடி
- மண்ணச்ச நல்லூர்
- துறையூர்
- முசிரி
- தொட்டியம்
[தொகு] புவியியல்
[தொகு] ஆறுகள்
திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன. திருச்சி வட்டத்தில் முக்கொம்பூர் எனுமிடத்தில் காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான் ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும். வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு, வடலாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலியவைப் பிரிகின்றன. உய்யக்கொண்டான் ஆறு திருச்சி நகர்புறத்தில் பல பாசனக் குளங்களுக்கு நீர் தருகிறது.
[தொகு] அணைகள்
கல்லணையும் மேலணையும் இம்மாவட்டத்தின் பழமை வாய்ந்த அணைக் கட்டுகளாகும்.
[தொகு] வெளி இணைப்புகள்
தமிழ்நாடு |
|
---|---|
தலைநகரம் | சென்னை |
மாவட்டங்கள் | அரியலூர் • ஈரோடு • கடலூர் • கரூர் • கன்னியாகுமரி •
காஞ்சிபுரம் • கிருஷ்ணகிரி • கோயம்புத்தூர் • சிவகங்கை • சென்னை • சேலம் • தஞ்சாவூர் • தர்மபுரி • திண்டுக்கல் • திருச்சிராப்பள்ளி • திருநெல்வேலி • திருவண்ணாமலை • திருவள்ளூர் • திருவாரூர் • தூத்துக்குடி • தேனி • நாகப்பட்டினம் • நாமக்கல் • நீலகிரி • புதுக்கோட்டை • பெரம்பலூர் • மதுரை • இராமநாதபுரம் • விருதுநகர் • விழுப்புரம் • வேலூர் |
முக்கிய நகரங்கள் | அம்பத்தூர் • ஆலந்தூர் • ஆவடி • ஈரோடு • கடலூர் • காஞ்சிபுரம் • கும்பகோணம் • கோயம்புத்தூர் • சென்னை • சேலம் • தஞ்சாவூர் • தாம்பரம் • திண்டுக்கல் • திருச்சிராப்பள்ளி • திருநெல்வேலி • திருப்பூர் • திருவண்ணாமலை • திருவொற்றியூர் • தூத்துக்குடி • நாகர்கோயில் • நெய்வேலி • பல்லாவரம் • புதுக்கோட்டை • மதுரை • இராஜபாளையம் • வேலூர்
|