நாமக்கல் மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாமக்கல் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் நாமக்கல் ஆகும். 1997 ம் ஆண்டு (1-1-1997) சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் தோன்றியது.
பொருளடக்கம் |
[தொகு] எல்லைகள்
இதன் மேற்கில் ஈரோடு மாவட்டமும் தெற்கில் கரூர் மாவட்டமும் கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும் வடக்கில் சேலம் மாவட்டமும் உள்ளன. காவிரி ஆறானது ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களை நாமக்கல் மாவட்டத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக உள்ளது.
[தொகு] வரலாறு
கொங்கு நாட்டின் பகுதியாக வரலாறு முழுவதும் இருந்துள்ளது. தகடூர் அதியமான்களின் ஆட்சிப் பகுதியிலும் பின்னர் கொங்கு சோழர், கங்கர், நாயக்கர், திப்புசுல்தான் முதலியோரின் ஆளுகையின் கீழ் இருந்தது.
[தொகு] நிர்வாகம்
[தொகு] வட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, இராசிபுரம், பரமத்தி ஆகிய 4 வட்டங்கள் உள்ளன. நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய 2 வருவாய் கோட்டங்கள் உள்ளன.
[தொகு] நகராட்சி
5 நகராட்சிகள் உள்ளன.
- நாமக்கல்
- திருச்செங்கோடு
- இராசிபுரம்
- பள்ளிபாளையம்
- குமாரபாளையம்
பள்ளிபாளையம் & குமாரபாளையம் இரண்டும் திருச்செங்கோடு வட்டத்துக்குள் வருகின்றன.
[தொகு] ஊராட்சி ஒன்றியம்
15 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
- எலச்சிப்பாளையம்
- கபிலர்மலை
- மல்ல சமுத்திரம்
- நாமகிரி பேட்டை
- பள்ளிபாளையம்
- புது சத்திரம்
- சேந்தமங்கலம்
- வெண்ணந்தூர்
- எருமைப்பட்டி
- கொல்லி மலை
- மோகனூர்
- நாமக்கல்
- பரமத்தி
- இராசிபுரம்
- திருச்செங்கோடு
[தொகு] தொகுதிகள்
நாமக்கல், திருச்செங்கோடு, இராசிபுரம், சேந்தமங்கலம், கபிலர்மலை, சங்ககிரி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இம்மாவட்டத்தை சேர்ந்தவை.
சட்டமன்ற தொகுதி | வாக்காளர்களின் எண்ணிக்கை |
---|---|
நாமக்கல் | 2,12,232 |
திருச்செங்கோடு | 2,96,618 |
இராசிபுரம் | 1,87,025 |
சேந்தமங்கலம் | 1,82,451 |
கபிலர்மலை | 1,71,751 |
திருச்செங்கோடு, இராசிபுரம் ஆகிய பாராளுமன்ற தொகுதிகள் இம்மாவட்டத்தை சேர்ந்தவை.
[தொகு] பொருளாதாரம்
நாமக்கல் மாவட்டம் சரக்கு போக்குவரத்து துறையிலும் கோழி வளர்ப்பிலும் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது.
- நாமக்கல் சுமையுந்து வண்டிகளின் உடலக அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது. சுமையுந்து தொடர்பான பட்டறை என்னும் தொழில் கூடங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது.
- திருச்செங்கோடு ஆழ்துழை (BoreWell) கிணறு தோண்டும் வண்டிகளுக்கு பெயர் பெற்றது.
- பள்ளிபாளையம், குமாரபாளையம் & திருச்செங்கோடு விசைத்தறி & கைத்தறி தொழிலுக்கு பெயர் பெற்றது.
- பள்ளிபாளையத்தில் சேஷாயி காகித ஆலை உள்ளது.
- மோகனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது.
- இராசிபுரம் பகுதி சவ்வரிசி ஆலைகளுக்கு பெயர் பெற்றது.
- பேளுக்குறிச்சி சந்தையானது கொல்லி மலையிலிருந்து வரும் மிளகு, மல்லி, சீரகம் போன்ற மளிகைப்பொருட்களுக்கு பெயர் பெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து வணிகர்கள் இங்கு வருவார்கள்.
[தொகு] சுற்றுலா
- கொல்லி மலை
- திருச்செங்கோடு காந்தி ஆசிரமம்
- திருச்செங்கோடு அர்த்தனாரி ஈசுவரர் கோயில்.
- நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில்
- நாமக்கல் மலைக்கோட்டை
- நாமக்கல் நரசிம்மர் - நாமகிரி தாயார் கோயில்
- நாமக்கல் அரங்கநாத பெருமாள் கோயில்
[தொகு] போக்குவரத்து
கன்னியாகுமரியை வாரணாசியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7 நாமக்கல் மாவட்டத்தின் வழியாக செல்கிறது. இது வேலூர், பரமத்தி, நாமக்கல், இராசிபுரம் ஆகிய நகரங்களை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 47 குமாரபாளையம் நகரின் ஊடாக செல்கிறது. சேலத்தை ஈரோட்டுடன் இணைக்கும் இரும்புப்பாதை நாமக்கல் மாவட்டத்தின் வழியாக சென்றாலும் இம்மாவட்டத்தில் தொடர் வண்டி நிலையம் எதுவும் இல்லை. நாமக்கல் வழியாக சேலத்தில் இருந்து கரூருக்கு அகலப் பாதை அமைக்கும் திட்டம் 1996-97 ல் ஒப்புதல் பெற்று, பணி மெதுவாக நடந்து வருகிறது. மல்லூர், இராசிபுரம், புதுசத்திரம், நாமக்கல், லத்துவாடி, மோகனூர், வாங்கல் வழியாக புதிய சேலம் - கரூர் இரும்புப்பாதை திட்டம் செல்கிறது.
- மாநில நெடுஞ்சாலை 94 - நாமக்கல்லையும் திருச்செங்கோட்டையும் இணைக்கிறது.
- மாநில நெடுஞ்சாலை 95 - மோகனூரை நாமக்கல் சேந்தமங்கலம் வழியாக இராசிபுரத்துடன் இணைக்கிறது.
- மாநில நெடுஞ்சாலை 25 - நாமக்கல்லையும் திருச்சிராப்பள்ளியையும் இணைக்கிறது
- மாநில நெடுஞ்சாலை 79 - ஈரோட்டையும் ஆத்தூரையும் திருச்செங்கோடு இராசிபுரம் நாமகிரிபேட்டை வழியாக இணைக்கிறது.
[தொகு] வெளி இணைப்புகள்
- நாமக்கல் மாவட்ட அதிகார பூர்வ வலைத்தளம்
- தமிழ்மொழி தமிழ் களஞ்சியம்
- http://www.thehindu.com/2006/12/27/stories/2006122711920400.htm
தமிழ்நாடு |
|
---|---|
தலைநகரம் | சென்னை |
மாவட்டங்கள் | அரியலூர் • ஈரோடு • கடலூர் • கரூர் • கன்னியாகுமரி •
காஞ்சிபுரம் • கிருஷ்ணகிரி • கோயம்புத்தூர் • சிவகங்கை • சென்னை • சேலம் • தஞ்சாவூர் • தர்மபுரி • திண்டுக்கல் • திருச்சிராப்பள்ளி • திருநெல்வேலி • திருவண்ணாமலை • திருவள்ளூர் • திருவாரூர் • தூத்துக்குடி • தேனி • நாகப்பட்டினம் • நாமக்கல் • நீலகிரி • புதுக்கோட்டை • பெரம்பலூர் • மதுரை • இராமநாதபுரம் • விருதுநகர் • விழுப்புரம் • வேலூர் |
முக்கிய நகரங்கள் | அம்பத்தூர் • ஆலந்தூர் • ஆவடி • ஈரோடு • கடலூர் • காஞ்சிபுரம் • கும்பகோணம் • கோயம்புத்தூர் • சென்னை • சேலம் • தஞ்சாவூர் • தாம்பரம் • திண்டுக்கல் • திருச்சிராப்பள்ளி • திருநெல்வேலி • திருப்பூர் • திருவண்ணாமலை • திருவொற்றியூர் • தூத்துக்குடி • நாகர்கோயில் • நெய்வேலி • பல்லாவரம் • புதுக்கோட்டை • மதுரை • இராஜபாளையம் • வேலூர்
|