ஈரோடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஈரோடு | |
மாநிலம் - மாவட்டங்கள் |
தமிழ்நாடு - ஈரோடு |
அமைவிடம் | |
பரப்பளவு - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
15600 கிமீ²
|
கால வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
மக்கள் தொகை (2001) - மக்களடர்த்தி |
500,000 - /கிமீ² |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 638 xxx - ++424 - TN 33 |
ஈரோடு (ஆங்கிலம்:Erode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். ஈரோடு விசைத்தறி தொழிலுக்கும் மஞ்சள் சாகுபடிக்கும் பெயர் பெற்றது. காங்கயம் காளைகளும் ஊத்துக்குளி வெண்ணையும் தமிழ் நாடு முழுவதும் புகழ் பெற்றவை. ஜவுளிப்பொருட்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள் ஆகியன உலகமுழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்பகுதி பருத்தி விளைச்சலுக்கு சாதகமாக உள்ளது. பஞ்சாலைகளும் மோட்டார் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளும் இங்குள்ள முக்கிய தொழில்களுள் ஒன்றாகும்.
பெரியசேமூர், வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், பி.பெ.அக்ரஹாரம், சூரியம்பாளையம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும், திண்டல், கங்காபுரம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, முத்தம் பாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளும் ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] புவியியல்
இவ்வூரின் அமைவிடம் [1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 183 மீட்டர் (600 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆகும்.[தொகு] முக்கிய சுற்றுலாத்தலங்கள்
- தந்தை பெரியார் நினைவிடம்
- திண்டல் முருகன் கோயில்
[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 151,184 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஈரோடு மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஈரோடு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[தொகு] இவ்வூரில் பிறந்த புகழ்பெற்ற மனிதர்கள்
- தந்தை பெரியார்
- சீனிவாச ராமானுஜம்
[தொகு] ஆதாரங்கள்
- ↑ Erode. Falling Rain Genomics, Inc. இணைப்பு அக்டோபர் 20, 2006 அன்று அணுகப்பட்டது.
- ↑ இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு. இணைப்பு அக்டோபர் 20, 2006 அன்று அணுகப்பட்டது.
[தொகு] வெளி இணைப்புகள்
தமிழ்நாடு |
|
---|---|
தலைநகரம் | சென்னை |
மாவட்டங்கள் | அரியலூர் • ஈரோடு • கடலூர் • கரூர் • கன்னியாகுமரி •
காஞ்சிபுரம் • கிருஷ்ணகிரி • கோயம்புத்தூர் • சிவகங்கை • சென்னை • சேலம் • தஞ்சாவூர் • தர்மபுரி • திண்டுக்கல் • திருச்சிராப்பள்ளி • திருநெல்வேலி • திருவண்ணாமலை • திருவள்ளூர் • திருவாரூர் • தூத்துக்குடி • தேனி • நாகப்பட்டினம் • நாமக்கல் • நீலகிரி • புதுக்கோட்டை • பெரம்பலூர் • மதுரை • இராமநாதபுரம் • விருதுநகர் • விழுப்புரம் • வேலூர் |
முக்கிய நகரங்கள் | அம்பத்தூர் • ஆலந்தூர் • ஆவடி • ஈரோடு • கடலூர் • காஞ்சிபுரம் • கும்பகோணம் • கோயம்புத்தூர் • சென்னை • சேலம் • தஞ்சாவூர் • தாம்பரம் • திண்டுக்கல் • திருச்சிராப்பள்ளி • திருநெல்வேலி • திருப்பூர் • திருவண்ணாமலை • திருவொற்றியூர் • தூத்துக்குடி • நாகர்கோயில் • நெய்வேலி • பல்லாவரம் • புதுக்கோட்டை • மதுரை • இராஜபாளையம் • வேலூர்
|