See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
கும்பமேளா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

கும்பமேளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மகா கும்பமேளா நடைபெறும் காட்சி
மகா கும்பமேளா நடைபெறும் காட்சி

கும்பமேளா (கிண்ணத் திருவிழா) இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு நான்கு முறை நடைபெறும். இந்தியாவின் பிரயாக், ஹரிட்வர், உஜ்ஜெயின் மற்றும் நாசிக் ஆகிய நான்கு பகுதிகளிலும் நடைபெறும் இத்திருவிழாவானது பன்னிரண்டு ஆண்டு இறுதியில் பிரயாக்கில் மகா கும்பமேளா என்ற விழாவின் மூலம் பிரசித்தி பெற்றது குறிப்பிடத்தக்கது. மகா கும்பமேளாவே உலகில் அதிகளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகும்.

பொருளடக்கம்

[தொகு] வானியலும் கும்பமேளாவும்

மகா கும்பமேளாத் திருவிழா பிரயாக்கில் மகா மாதத்தில் நடைபெறுகின்றது. அதாவது (ஜனவரி / பெப்ரவரி). பலர் அமாவாசை நாளில் நீராடுவது மிகுந்த பலனை அளிப்பதாக நம்பிக்கையுடன் உள்ளார்கள். ஜூபிட்டர் கிரகம் டௌரஸ் (Taurus) நட்சத்திரங்களில் உள்ள போது சூரியனும் சந்திரனும் காப்ரிகோர்ன் (capricorn) நட்சத்திரத்தில் இருக்கின்றது. இவ்வமைப்பே அமாவாசை நாளாகும்.

ஹரித்வாரில், பால்குன் மற்றும் சைத்ரா ஆகிய மாதங்களில் (பெப்ரவரி / மார்ச் / ஏப்ரல்), சூரியன் அரைஸிலிருந்து (Aries) செல்லும் பொழுது சந்திரன் சகிட்டாரியஸிலும் (Sagittarius) யூப்பிட்டர் அக்குவேரஸிலும் (Aquarius) உள்ள போது கும்பமேளா நடைபெறுகின்றது.

உஜ்ஜெயின் பகுதியில் இவ்விழா வைகாசி மாதத்தில் அதாவது மே மாதத்தில் சூரியனையும் சந்திரனையும் தவிர மற்றைய கிரகங்களும் லிப்ராவில் (Libra) உள்ள போது சூரியனும் சந்திரனும் அரைஸ் மற்றும் யூப்பிட்டரிலுள்ள லியோவிலும் (leo)இருக்கும்.

நாசிக் பகுதியில் நடைபெறும் கும்பமேளாவானது ஸ்ரவணா மாதத்தில் அதாவது ஜூலையில் சூரியனும் சந்திரனும் கான்சரில் (cancer) உள்ளபோது யூப்பிட்டர் ஸ்கோர்ப்பியோவில் (scropio) உள்ள பொழுது நிகழும்.

மேலும் ஒருவகை போதைச்சுவை கொண்ட இனிய பானம் விண்ணுலகு அதாவது சொர்க்கம் என்றழைக்கப்படும் இடத்திலிருந்து பூமியில் விழுகின்றது எனக்கூற்றுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

[தொகு] புராணக் கூற்றுகள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வேதங்கள் தழைத்தோங்கியிருந்தன. அச்சமயம் ஒற்றுமையுடன் இருந்த தேவர்களும் அசுரர்களும் அமிர்த பானத்தினை க்ஷீர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக்கும் பொழுது அமிர்த பானமிருந்த கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் செல்கின்றனர். இவர்களைத் துரத்திச் செல்லும் தேவர்களும் பன்னிரண்டு நாட்களும் பன்னிரண்டு இரவுகளும் (12 ஆண்டுகளுக்குச் சமம்) வானுலகில் போர் செய்தனர். அச்சமயம் வானுலகிலிருந்து அமிர்த பானம் சொட்டிக் பூலோகத்திலிருந்த நான்கு இடங்களில் விழுந்ததெனவும் அதனால் மகா கும்பமேளா ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

[தொகு] கும்ப மேளா 2003

2003 ஆம் ஆண்டில் நாசிக்கில் ஜூலை 27 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 7 ஆம் திகதிவரை நடைபெற்ற கும்பமேளாவில் 70 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். மேலும் சன நெரிசல்கள் காரணமாக 28 பெண்களும் 11 ஆண்களும் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோதாவரி நதிக் கரையில் கூடிய மக்கள் கூட்டம் அங்கு நீராடுவர். ராம்குட் என்னும் இடத்தில் சாதுக்கள் முதலில் நீராட அனுமதிக்கப்படுகின்றனர். சாதுக்கள் பின்னர் ஆற்றில் போடும் வெங்கல நாணயங்களை எறியும்பொழுது மக்கள் கூட்ட அந்நாணயங்களைப் பெற முட்டி மோதுவதும் குறிப்பிடத்தக்கது. சாதுக்களினால் வழங்கப்பட்ட அந்நாணயமானது அரிய சக்திகளை உடையதாக மக்கள் இன்றளவிலும் கருதுவது குறிப்பிடத்தக்கது.

[தொகு] கும்ப மேளா 2007

ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா கொண்டாடப்படுகின்றது. அடுத்த கும்ப மேளா அலாகபாத்தில் பிப்ரவரி 2007 அன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

[தொகு] வெளியிணைப்புகள்


 பா    தொ பண்டிகைகள் (இந்து நாள்காட்டியில்)
போகி | மகர சங்கிராந்தி | தைப்பொங்கல் | மாட்டுப் பொங்கல் | தைப்பூசம் | தை அமாவாசை | மகா சிவராத்திரி | மாசி மகம் | ஹோலி | பங்குனித் திங்கள் | பங்குனி உத்தரம் | தமிழ்ப் புத்தாண்டு | சித்திரைப் பரணி | சித்திரா பௌர்ணமி | உகாதி | இராம நவமி | திருவிளக்குப் பூசை | வைகாசி விசாகம் | ஆனி உத்தரம் | ஆடிப்பூரம் | ஆடி அமாவாசை | ஆடிச் செவ்வாய் | கிருஷ்ண ஜெயந்தி | ஓணம் | ஆடிப்பூரம் | ஆவணி சதுர்த்தி | ஆவணி மூலம் | ரக்ஷா பந்தன் | விநாயகர் சதுர்த்தி | நவராத்திரி நோன்பு | விஜயதசமி | தீபாவளி | கந்த சஷ்டி | கேதாரகௌரி விரதம் | பிள்ளையார் பெருங்கதை | கார்த்திகை விளக்கீடு | திருவாதிரை நோன்பு | சனிப்பிரதோஷ விரதம் | ஏகாதசி விரதம் | வைகுண்ட ஏகாதசி | வரலட்சுமி நோன்பு | புரட்டாதிச் சனி | திருவெம்பாவை நோன்பு | மார்கழித் திருவாதிரை | கும்பமேளா


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -