கந்த சஷ்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அநுட்டிக்கின்றனர்.
[தொகு] முருகன் சூரனை அழித்தல்
ஆறு நாட்கள் நடைபெற்ற சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.
கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.
[தொகு] கந்த சஷ்டி விரதம்
இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.
பண்டிகைகள் (இந்து நாள்காட்டியில்) | |
---|---|
போகி | மகர சங்கிராந்தி | தைப்பொங்கல் | மாட்டுப் பொங்கல் | தைப்பூசம் | தை அமாவாசை | மகா சிவராத்திரி | மாசி மகம் | ஹோலி | பங்குனித் திங்கள் | பங்குனி உத்தரம் | தமிழ்ப் புத்தாண்டு | சித்திரைப் பரணி | சித்திரா பௌர்ணமி | உகாதி | இராம நவமி | திருவிளக்குப் பூசை | வைகாசி விசாகம் | ஆனி உத்தரம் | ஆடிப்பூரம் | ஆடி அமாவாசை | ஆடிச் செவ்வாய் | கிருஷ்ண ஜெயந்தி | ஓணம் | ஆடிப்பூரம் | ஆவணி சதுர்த்தி | ஆவணி மூலம் | ரக்ஷா பந்தன் | விநாயகர் சதுர்த்தி | நவராத்திரி நோன்பு | விஜயதசமி | தீபாவளி | கந்த சஷ்டி | கேதாரகௌரி விரதம் | பிள்ளையார் பெருங்கதை | கார்த்திகை விளக்கீடு | திருவாதிரை நோன்பு | சனிப்பிரதோஷ விரதம் | ஏகாதசி விரதம் | வைகுண்ட ஏகாதசி | வரலட்சுமி நோன்பு | புரட்டாதிச் சனி | திருவெம்பாவை நோன்பு | மார்கழித் திருவாதிரை | கும்பமேளா |