ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம் எனப் பொருள் தரும் Deoxyribonucleic acid (DNA) அல்லது Deoxyribose nucleic acid ஒரு கரு அமிலம் ஆகும். திசுள் வடிவிலான அனைத்து உயிரினங்களின் (சில வைரஸ்கள் உட்பட) உயிர் வளர்ச்சிக்கான மரபுக் கட்டளைகள் DNAவில் அடங்கியுள்ளது. உயிரினங்களின் பாரம்பரியப் பண்புகள் அவற்றின் சந்ததிகளுக்கும் வருவதற்கு DNAவே காரணமாகும். இனப்பெருக்கத்தின் பொழுது DNA மூலக்கூறுகள் இரட்டித்து பெருகி சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது.