அனைத்துலக விண்வெளி நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அனைத்துலக விண்வெளி நிலையம் என்பது விண்ணிலே நம் நில உருண்டையைச் சுற்றிவரும் ஒரு செயற்கை விண்நிலையம். பன்னாட்டு மக்கள் ஒன்றாக உழைத்து உருவாக்கிய நெடுங்காலம் நிலைத்து விண்ணிலே இயங்க வல்ல ஒரு விண்வெளி நிலையம். இதனை ஆங்கிலத்திலே International Space Station (ISS) என்பர். இந்த அனைத்துலக விண்வெளி நிலையம் (முதலெழுத்துச் சுருக்கமாக தமிழில் அவிநி), நம் நிலவுருண்டையில் இருந்து 360 கி.மீ உயரத்திலே, காற்று(வளி) மண்டலத்தைத் தாண்டி உள்ள புற வெளியிலே, 92 மணித்துளிகளுக்கு ஒருமுறை நம் நில உருண்டையச் சுற்றி வருகின்றது. நவம்பர் 1998ல் நிறுவப்பட்ட பின் 2005ஆம் ஆண்டு சூன் மாதம் வரையிலுமே சுமார் 37,500 தடவைக்கும் மேலாக உலகைச் சுற்றி வந்துள்ளது.
இந்த அவநியை உருவாக்கியது ஒரு பெரும் பொறியியல் வெற்றி. இந்நிலையத்தை 2010ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக கட்டிமுடிக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இந்நிலையத்தை இயக்கவும், பழுது பார்க்கவும் ஆய்வுகள் நடத்தவும் எப்பொழுதும் இரண்டு பேர் இருப்பர்கள். நவம்பர் 2, 2000ல் இருந்து யாரேனும் 2 பேர் இருந்து வந்திருக்கிறார்கள். இந்நிலையத்தை இயக்கத்தேவையான எல்லாப் பொருட்களையும், கட்டுமானப் பொருட்கள் முதற்கொண்டு எல்லாவற்றையும், பூமியில் இருந்து விண்ணூர்தி வழியாக எடுத்துச் செல்லவேண்டும். இப்பெரும் பன்னாட்டுக் கூட்டு முயற்சியில் பங்கு கொள்ளும் நிறுவனங்கள் யாவை என்றால், அமெரிக்காவின் நாசா (NASA), உருசிய கூட்டாட்சி விண்வெளி நிறுவனம், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்,சப்பானிய வான் விண்வெளி வெளித்தேடல் நிறுவனம், கனடா விண்வெளி நிறுவனம் ஆகும். இவையன்றி, பிரேசில் விண்வெளி நிறுவனமும் இத்தாலிய விண்வெளி நிறுவனமும் பல்வேறு நிலைகளில் பங்கு கொள்ளுகின்றன.
இந்த அவநியில் பன்னாட்டைச் சேர்ந்த பலர் சென்று இருந்து திரும்பி இருக்கிறார்கள். வியப்பூடும் விதமாக, பொது மக்களில் மூன்று பேரும் சுற்றுலாப் பயணமாக சென்று திரும்பியுள்ளார்கள்.
[தொகு] அனைத்துலக விண்வெளி நிலையம் (அவிநி) கட்டுதல்
[தொகு] அவிநியின் அமைப்பு