Web Analytics

See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
யானை - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

யானை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

யானை
தான்சானியாவில் ஒரு ஆப்பிரிக்க யானை.
தான்சானியாவில் ஒரு ஆப்பிரிக்க யானை.
அறிவியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: Vertebrata
வகுப்பு பாலூட்டி
வரிசை: Proboscidea
பெருங்குடும்பம்: Elephantoidea
குடும்பம்: Elephantidae
Gray, 1821
Subfamilia
  • See Classification

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மாந்தர்களைத் தவிர்த்த விலங்குகளிலே இதுவே அதிக நாட்கள் வாழும் நில விலங்கு ஆகும். இவை மிகவும் வலிமையானவை. வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவைகளுமான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. ஒரோவொருக்கால் சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும், ஆனால் இவ்வகை நிகழ்வுகள் மிக மிக குறைவே. யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை (மனிதனைத்தவிர).

யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கு இடையே சிறப்பான வேறுபாடுகள் உண்டு. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பர்.

பொருளடக்கம்

[தொகு] யானையினங்கள்

தர்பூசணிப் பழத்தைத் உண்ணும் ஆசிய யானை
தர்பூசணிப் பழத்தைத் உண்ணும் ஆசிய யானை

ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளை விட உருவத்தில் பெரியவை. பெரிய காது மடல்களைக் கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண் பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால் ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது. ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்து சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமனாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கை நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால் முன்னங் கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங் கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும் காது மடல்கள் சிறியனவாக இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஓர் இதழும் இருக்கும் (மேல் புறம்). முன்னங் கால்களில் ஐந்து நகங்களும், பின்னங் கால்களில் நான்கு நகங்களும் இருக்கும்.

[தொகு] உணவும் வாழிடமும்

யானைகள் மரம் செடிகொடிகளை உண்ணும் இலையுண்ணி அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும் இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.

[தொகு] உடலமைப்பு

தந்தம் உள்ள ஓர் யானை. தந்தம் என்பதைக் கோடு என்றும் எயிறு என்றும் கூறுவர். யானையின் பல் தான் தந்தம், எயிறு என்பன. இது வளைந்து உள்ளதால் கோடு என்று பெயர்.
தந்தம் உள்ள ஓர் யானை. தந்தம் என்பதைக் கோடு என்றும் எயிறு என்றும் கூறுவர். யானையின் பல் தான் தந்தம், எயிறு என்பன. இது வளைந்து உள்ளதால் கோடு என்று பெயர்.

ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிப்பானவை. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும்,. எனினும் மெத்தெனவே இருக்கும். இதனால் கொசு முதலியனவும் கடிக்கும். யானை வலுவான நான்கு கால்களைக் கொண்டிருக்கிறது. யானை பெருத்த உடலைக் கொண்டிருந்தாலும் மலை மீது நெடுங்குத்தான இடங்களிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் வல்லது. "ஆனைக்கும் அடி சறுக்கும்" என்னும் பழமொழி, யானையின் நெடுங்குத்தான ஏற்ற இறக்கங்களில் அதன் நடைத்திறனைக் குறிப்பிட்டு எழுந்ததாகும்.

[தொகு] தும்பிக்கை

யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை ஆகும். இது யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகின்றது. ஒரு சில விலங்குகளிலே முன் மூக்குப் பகுதி சற்று நீண்டு இருந்தாலும் (நெடுமூக்குக் குரங்கு போல்), தும்பிக்கை போலும் நீண்ட உறுப்புடைய விலங்குகள் இல்லை. தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. தும்பிக்கையால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்க முடியும். இவை பொதுவாக உணவை எடுப்பதற்கும் நீர் பருகுவதற்கும் உதவுகின்றன.

[தொகு] தந்தம்

உருசியாவை ஆண்ட இவானின் தந்தத்தினாலான அரியனை
உருசியாவை ஆண்ட இவானின் தந்தத்தினாலான அரியனை

யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். இந்த யானைக் கோடானது ஆசிய இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு (களிறுக்கு) மட்டுமே உண்டு பெண் யானைகளுக்குக் (பிடிக்குக்) கிடையா. ஆனால் ஆப்பிரிக்கக் காட்டு யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் யானைகளுக்கும் (களிறு, பிடி ஆகிய இரண்டிற்கும்) கோடு உண்டு. சுமத்ரா போர்னியோ பகுதிகளில் வாழும் யானை, இலங்கையின் யானைகளில் ஆண் பெண் (களிறு, பிடி) ஆகிய இருபால் விலங்குகளுக்கும் பெரும்பாலும் யானைக் கோடு கிடையா. யானைக் கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும். இதனால் இவைகளுக்கு யானைகளின் எயிறு அல்லது தந்தம் என்றும் பெயர் (எயிறு, தந்தம் என்றால் பல் என்று பொருள்). தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம்.

[தொகு] தோல்

யானையின் தோல் மிகவும் தடிப்பானது. உடலின் பெரும்பாலான பகுதிகளில் தடித்த தோல் காணப்படுகிறது. தோலின் தடிமன் ஏறத்தாழ இரண்டரை சென்டிமீட்டர் இருக்கும். எனினும் இதன் வாயைச் சுற்றியும் காதின் உட்பகுதியிலும் தோல் மெல்லியதாக உள்ளது. பொதுவாக ஆசிய யானைகளின் தோல் ஆப்பிரிக்க யானைகளை விட கூடுதலான முடியைக் கொண்டுள்ளது.

யானைகள் பொதுவாக சேற்றையோ மண்ணையோ உடல் முழுதும் பூசிக் கொள்கின்றன. இது யானைச் சமூகத்தின் ஒரு முக்கியக் குணம் ஆகும். இது யானையின் தோலை சூரிய வெப்பத்தில் இருந்தும் கதிர் வீச்சில் இருந்தும் காத்துக் கொள்ள உதவுகிறது. யானையின் தோல் தடித்து இருப்பினும் இதன் உணர்திறன் அதிகம். இதனாலேயே யானைகள் சேற்றையோ அல்லது குளித்த பின் மண்ணை வாரித் தூற்றிக் கொள்கின்றன.

[தொகு] கால்கள்

ஆசுத்திரேலியாவின் விலங்குக் காட்சியகம் ஒன்றில் ஆசிய ஆனை ஒன்று தன் கால்களால் தர்பூசணிப்பழமொன்றை உடைக்கும் காட்சி
ஆசுத்திரேலியாவின் விலங்குக் காட்சியகம் ஒன்றில் ஆசிய ஆனை ஒன்று தன் கால்களால் தர்பூசணிப்பழமொன்றை உடைக்கும் காட்சி

யானையின் பெரிய உடலைத் தாங்குதற்கு ஏற்ப இவை வலிமையான கால்களைக் கொண்டுள்ளன. இவற்றின் கால்கள் செங்குத்தாக இருப்பதாலும் அகன்ற பாதங்கள் இருப்பதாலும் இவை நிற்பதற்கு தசையாற்றல் அதிகம் தேவையில்லை. எனவே இவற்றால் நீண்ட நேரம் இளைப்பாறாமல் நிற்க இயலும். ஆப்பிரிக்க யானைகள் நோயுற்றாலோ அல்லது காயம் பட்டாலோ தவிர பெரும்பாலும் அமர்வதில்லை. ஆனால் ஆசிய யானைகள் அடிக்கடி இளைப்பாறுகின்றன.

யானை அகன்ற வட்டமான அடியைக் (பாதம்) பெற்றுள்ளது. ஆப்பிரிக்க யானைக்கு பின்னங்கால்களில் மூன்று உகிர்களும் (நகங்கள்) முன்னங்கால்களில் நான்கும் உள்ளன. ஆசிய யானைக்கு பின்னங்கால்களில் நான்கும் முன்னங்கால்களில் ஐந்துமாக உகிர்கள் உள்ளன. யானைகளால் நன்கு நீந்தவும் ஏறவும் முடியும். இவற்றால் குதிக்க இயலாது.

[தொகு] காதுகள்

யானைகள் நன்கு பெரிய அகன்ற மடல் போன்ற காதுகளைக் கொண்டுள்ளன. இவை யானையின் உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. யானையின் காதுகள் இரத்த நாளங்கள் நிரம்பியனவாய் உள்ளன. வெப்பம் மிகுந்த இரத்தம் காதுகளில் பாயும் போது சுற்றுப்புறக் காற்று பட்டு குளிர்கிறது. பின் இது உடலுக்குள் சென்று வெப்பநிலையைக் குறைக்கிறது. இரத்தச் சுழற்சியின் காரணமாக இச்செயல் தொடர்ந்து நிகழ்ந்து வெப்பநிலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதனாலேயே யானைகள் எப்போதும் காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதைக் காணலாம். வளர்ந்த யானைக்காதுகளின் மேல் ஓரம் ஆசிய யானைக்கு வெளிப்புறம் மடிந்து இருக்கும், ஆப்பிரிக்க யானைக்கு உட்புறம் சுருண்டிருக்கும். [1]

[தொகு] அறிவாற்றல்

தந்தம் இல்லாத தம்புள்ளவில் உள்ள ஓர் இலங்கை யானை
தந்தம் இல்லாத தம்புள்ளவில் உள்ள ஓர் இலங்கை யானை

தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும். இது ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன.

[தொகு] புலன் உணர்வு

யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன. யானைக்கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தன் பார்வையை விட கூர்மையான கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத்திறனையுமே நம்பி வாழ்கிறது. [2] இவற்றின் தும்பிக்கையும் உணர்திறன் மிக்கது. இவற்றின் காது மட்டுமன்றி தும்பிக்கையும் அதிர்வுகளை உணர வல்லது. இவற்றின் பாதங்கள் மிகக் குறைந்த அதிர்வெண்களையும் உணர வல்லன.

[தொகு] குமுக வாழ்க்கை

களிறுகளின் குமுக வாழ்க்கை முறையும் பிடிக்களின் வாழ்க்கை முறையும் வேறுபட்டது. களிறுகள் தான் பருவம் எய்தும் வரை தன் தாய் உள்ள குழுவோடு வாழும், பின் பெரும்பாலும் தனியாகவே வாழ்கின்றன. ஆனால் பிடிக்கள் நன்கு பிணைப்பான குடும்பமாக தாய், சகோதரி, மகள் என வாழ்கின்றன. இனப்பெருக்க காலங்களில் பருவமெய்திய பிடியும் தனித்துக்காணப்படும்.

[தொகு] தன்னுணர்வு

யானைகள் தன்னுணர்வு கொண்டவை. இது கண்ணாடிச் சோதனை மூலம் நிறுவப்பட்டுள்ளது. யானைகள் முன் கண்ணாடியை வைக்கும் போது இவை தங்களை அடையாளம் கண்டுகொள்கின்றன. இத்திறன் இதுவரை மதிமாக்கள், சில குரங்கினங்கள், டால்பின்களில் மட்டுமே கண்டறியப் பட்டுள்ளது.

[தொகு] இனப்பெருக்கம்

யானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 - 115 கிலோகிராம் எடை வரை இருக்கும். யானை ஈனும் முன்னும், ஈனும் பொழுதும், ஈன்ற பின்னரும் அதனைச் சுற்றிலும் மற்ற வளர்ந்த யானைகள் இருந்து மிகவும் உதவுகின்றன. யானைக்கன்று பிறந்ததில் இருந்து, அது யானைக் கூட்டத்தாலேயே வளர்க்கப்படுகின்றது.

[தொகு] அச்சுறுத்தல்கள்

திருகோணமலை அல்லைக்கந்தளாய் காட்டுப்பகுதியில் உள்ள காட்டுயானை
திருகோணமலை அல்லைக்கந்தளாய் காட்டுப்பகுதியில் உள்ள காட்டுயானை

யானைகளுக்கு முக்கியமான அச்சுறுத்தல் வேட்டையாடுதல் ஆகும். யானைகள் அவற்றின் தந்தங்களுக்காக வேட்டை ஆடப்படுகின்றன. யானைகளின் வாழிடங்கள் அழிக்கப் படுவதும் மற்றொரு முக்கியமான அச்சுறுத்தல் ஆகும். காடழிப்பு யானைகளின் வாழிடத்தைக் குறைக்கின்றது.

[தொகு] இறப்பு

இருதயக் கோளாறு, மாரடைப்பு, மூளையில் இரத்தக்கட்டி போன்றவற்றால் யானைகள் இறக்கக்கூடும். [3]

[தொகு] பழமொழிகளும் சொலவடைகளும்

தமிழில் யானை பற்றிய பழமொழிகளும் சொலவடைகளும் இப்பகுதியில் கொடுக்கப் பட்டுள்ளன.

[தொகு] பழமொழிகள்

  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
  • யானைக்கும் அடி சறுக்கும்.
  • யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்
  • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

[தொகு] சொலவடைகள்

  • யானைப்பசிக்கு சோளப்பொறியா?
  • யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது போல

[தொகு] துணை நூற்பட்டியல்

  • ச, முகமது அலி (நவம்பர் 2004). யானைகள் அழியும் பேருயிர். மேட்டுப்பாளையம்: மலைபடு கடாம் பதிப்பகம், 117.

[தொகு] மேற்கோள்கள்

  1. ச.முகமது அலி, பக். 16
  2. ச.முகமது அலி, பக். 21
  3. ச.முகமது அலி, பக். 31

[தொகு] வெளி இணைப்புகள்

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu