தாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உயிரியல் நோக்கிலும் அல்லது சமூக நோக்கிலும் ஒரு குழந்தையைப் ஈன்றெடுக்கும் பெண் தாய் அல்லது அன்னை எனப்படுவார்.
மனிதனைப் போன்ற பாலூட்டிகளில் தாய், கரு உண்டாவதில் இருந்து கரு குழந்தையாக வளர்ச்சி பெறும் வரை தன் கருப்பையில் தாங்கியிருக்கிறாள்.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் இருவருக்கும் மற்ற உறவினர்களுக்கும் பங்குகள் இருந்தாலும், தாய்க்கு சிறப்பான பங்கு உண்டு. யானைகளில், யானைக்குட்டிக்கு அத்தியாவசியத் தேவைகள் உணவு, பாதுகாப்பு, மற்றும் தாயன்பு தான். ஒரு வேளை தாய்ப்பால் கிடைக்காத நிலை ஏற்பட்டால் குட்டியின் வாழும் வாய்ப்பு குறைகிறது. ஆயினும் ஒரு யானைக்குட்டி மிக மோசமாக பாதிக்கப்படுவது தனிமையால் தான். [1]
தமிழில் அம்மா, அன்னை, ஆய் போன்ற சொற்கள் தாயைக் குறிக்கப் பயன்படுகின்றன.
[தொகு] துணை நூற்பட்டியல்
- ச, முகமது அலி (நவம்பர் 2004). யானைகள் அழியும் பேருயிர். மேட்டுப்பாளையம்: மலைபடு கடாம் பதிப்பகம், 117.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ ச.முகமது அலி, பக். 29
[தொகு] மேலும் பார்க்க
- தந்தை