பிலடெல்பியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிலடெல்பியா நகரம் | |||
பிலடெல்பியா வியாபாரப் பகுதி | |||
|
|||
சிறப்புப்பெயர்: "சகோதரத்துவ நகரம்", "ஃபிலி" | |||
குறிக்கோள்: "Philadelphia maneto" - "சகோதரத்துவம் நீடித்திருக்கவும்" | |||
பென்சில்வேனியாவிலிருந்த இடம் | |||
அமைவு: | |||
---|---|---|---|
நாடு | ஐக்கிய அமெரிக்கா | ||
மாநிலம் | பென்சில்வேனியா | ||
மாவட்டம் | பிலடெல்பியா | ||
தோற்றம் | அக்டோபர் 27 1682 | ||
அரசு | |||
- மாநகராட்சித் தலைவர் | மைக்கல் நட்டர் (D) | ||
பரப்பளவு | |||
- City | 369.4 கிமீ² (142.6 சதுர மைல்) | ||
- Land | 349.9 கிமீ² (135.1 சதுர மைல்) | ||
- நீர் | 19.6 கிமீ² (7.6 sq mi) | ||
- புறநகர் | 4,660.7 கிமீ² (1,799.5 சதுர மைல்) | ||
- மாநகரம் | 11,989 கிமீ² (4,629 சதுர மைல்) | ||
ஏற்றம் | 12 மீ (39 அடி) | ||
மக்கள் தொகை (2006) | |||
- City | 1,448,394 (6வது) | ||
- அடர்த்தி | 4,201.8/கிமீ² (10,882.8/சதுர மைல்) | ||
- புறநகர் | 5,325,000 | ||
- மாநகரம் | 5,823,233 | ||
நேர வலயம் | EST (ஒ.ச.நே.-5) | ||
- கோடைகாலம் (ப.சே.நே.) |
EDT (ஒ.ச.நே.-4) | ||
தொலைபேசி குறியீடு(கள்) | 215, 267 | ||
இணையத்தளம்: http://www.phila.gov |
பிலடெல்பியா அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் ஆறாவது பெரிய நகரமும் அந்நாட்டின் ஏழாவது பெரிய மக்கள்தொகை அடர்த்தி கொண்ட நகரமும் ஆகும். இது பிலடெல்பியா கவுண்டியின் தலைமை இடமாகவும் செயற்படுகின்றது. 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 1.44 மில்லியன் மக்களுக்கு மேல் இங்கே வாழ்கிறார்கள். இதனையும் உள்ளடக்கிய டெலாவெயர் பள்ளத்தாக்கு மெட்ரோபாலிட்டன் பகுதியின் மக்கள்தொகை 5.8 மில்லியன்களாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் 5 ஆவது பெரியதும் உலக நகரங்களின் வரிசையில் 45 ஆவது மக்கள்தொகையும் ஆகும். ஒரு காலத்தில் இது இலண்டனுக்கு அடுத்தபடியாக, பிரித்தானியப் பேரரசின் இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்கியது. 18 ஆம் நூற்றாண்டில், அரசியல் மற்றும் சமூக அடிப்படையில் இந்நகரின் முக்கியத்துவம் நியூ யார்க் நகரினதைக் காட்டிலும் மேலோங்கியிருந்தது. அமெரிக்கப் புரட்சி தொடர்பான எண்ணக்கருக்களும், தொடர்பான செயற்பாடுகளும் இங்கேயே உருவானதன் காரணமாக தொடக்ககால அமெரிக்க வரலாற்றின் மையமாக இந்நகரம் விளங்கியது எனலாம்.