பாஸ்பரஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
|||||||||||||||||||||||||
பொது | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர்,குறி எழுத்து, தனிம எண் |
பாஸ்பரஸ், P, 15 | ||||||||||||||||||||||||
வேதிப்பொருள் வரிசை | மாழையிலி | ||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடைக்குழு, எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..) |
15, 3, p | ||||||||||||||||||||||||
தோற்றம் | மெழுகுபோல் வெள்ளை/சிவப்பு/ கருப்பு/நிறமிலி |
||||||||||||||||||||||||
அணு எடை | 30.973762(2) g·mol−1 | ||||||||||||||||||||||||
எதிர்மின்னிகள் அமைப்பு | [Ne] 3s2 3p3 | ||||||||||||||||||||||||
சுற்றுப்பாதைகளில் எதிர்மின்னிகள் |
2, 8, 5 | ||||||||||||||||||||||||
அடர்த்தி (அறை வெப்பநிலை) |
(வெள்ளை) 1.823 g·cm−3 | ||||||||||||||||||||||||
(அறை வெப்பநிலை அருகே அடர்த்தி | (சிவப்பு) 2.34 g·cm−3 | ||||||||||||||||||||||||
அறை வெப்பநிலை அருகே அடர்த்தி |
(கருப்பு) 2.69 g·cm−3 | ||||||||||||||||||||||||
கொதி நிலை | (வெள்ளை) 317.3 கெ, K (44.2 °C, 111.6 °F) |
||||||||||||||||||||||||
உருகு வெப்பநிலை |
550 கெ, K (277 °C, 531 °F) |
||||||||||||||||||||||||
உருகுநிலை வெப்பம் | (வெள்ளை) 0.66 கிஜூ.மோல்−1, (kJ·mol−1) |
||||||||||||||||||||||||
வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
12.4 கிஜூ.மோல்−1, (kJ·mol−1) |
||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | (25 °C) (வெள்ளை) 23.824 J·mol−1·K−1 |
||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
ஆக்ஸைடு நிலைகள் | ±3, 5, 4 (mildly காடிய ஆக்ஸைடு) |
||||||||||||||||||||||||
எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு | 2.19 (Pauling scale) | ||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல்கள் ()more |
1st: 1011.8 kJ·mol−1 | ||||||||||||||||||||||||
2nd: 1907 kJ·mol−1 | |||||||||||||||||||||||||
3rd: 2914.1 kJ·mol−1 | |||||||||||||||||||||||||
அணுவின் ஆரம் | 100 pm பிமீ | ||||||||||||||||||||||||
அணுவின் ஆரம் (கணிப்பு) | 98 pm | ||||||||||||||||||||||||
கூட்டுப்பிணைப்பு ஆரம் | 106 pm | ||||||||||||||||||||||||
வான் டெர் வால் ஆரம் | 180 pm | ||||||||||||||||||||||||
பிற இயல்பியல் வேதியியல் பண்புகள் | |||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | தரவு இல்லை | ||||||||||||||||||||||||
வெப்பக் கடத்துமை | (300 K) (வெள்ளை) 0.236 W·m−1·K−1 |
||||||||||||||||||||||||
பரும தகைமை(Bulk modulus) | 11 GPa | ||||||||||||||||||||||||
CAS எண் | 7723-14-0 | ||||||||||||||||||||||||
தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள் | |||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
மேற்கோள் குறிப்புகள் | |||||||||||||||||||||||||
பாஸ்பரஸ் (ஆங்கிலம்: Phosphorus, IPA: [ˈfɒsfərəs], Greek: phôs "ஒளி" + phoros "பெற்றிருப்பது") என்னும் வேதியியல் தனிமம் சில வகையான பாறைகளில் கிடைக்கும் ஒரு பொருள். இத் தனிமம் நைட்ரஜன் நெடுங்குழுவைச் சேர்ந்த மாழையிலி வகையைச் சேர்ந்தது. அணுவெண் 15 கொண்ட இத்தனிமத்தின் வேதியியல் குறி P ஆகும். இத் தனிமத்தின் வேதியியல் வினையில் பங்கு கொள்ளும் எதிர்மின்னிகளைக் கொண்டு இது பல் இயைனித் தனிமம் எனப்படுகின்றது.
மிகுந்த விறுவிறுப்புடன் வேதியியல் வினைப் படுவதால், பாஸ்பரஸ் தூய, கலப்பில்லாத தனிமமாக இயற்கையில் கிடப்பதில்லை. வெண்மையான நிறம் கொண்ட ஒரு வகையான பாஸ்பரஸ் ஆக்ஸிஜனுடன் கலக்கும்பொழுது மங்கலாக வெண்னிற ஒளி உமிழ்கின்றது. இதனாலேயே இதன் கிரேக்க மொழிப் பெயர் "ஒளி பெற்றிருக்கும்" பொருள் என்பதாகும் ("பாஸ்பரஸ்").
பாஸ்பரஸ், வேளாண்மையில் பயிர்களுக்கு இடப்படும் உரத்தில் ஒரு முக்கிய ஊட்டம்தரும் பொருளாகப் பயன்படுகின்றது. உயிரினங்களில் டி.என்.ஏ என்னும் உயிர்ச்சுருளிழையில் உள்ள ஒரு முக்கியப் பொருளாகவும் செல்கள் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்களில் ஒன்றாகவும் உள்ளது. தீக்குச்சிகளிலும், மத்தாப்பு வாணவேடிக்கை முதலியவற்றிலும், வெடிப்பொருள்களிலும் "மருந்தாகப்" பயன்படுகின்றது. இது தவிர பூச்சிக் கொல்லிகளிலும், பற்பசை, மற்றும் அழுக்குநீக்கிப் படிகாரங்களிலும் பயன்படுகின்றது