கலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கலம் என்பது, உயிரிகளின் கட்டமைப்பினதும், தொழிற்பாடுகளினதும் அடிப்படை அலகாகும்.
பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் ஒரே ஒரு திசுளால் ஆனவை.மனிதர்கள் போன்ற பல உயிரினங்கள் [பலத் திசுள் உயிரினங்களாகும்.(மனித உடலில் 100,000 பில்லியன் = 1014 திசுள்கள் இருப்பதாகத் தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது).
ஒத்த குணநலன்களைக் கொண்ட திசுள்கள் ஒருங்கிணைந்து திசுக்களை உருவாக்குகின்றன. திசுள்களின் அமைப்பு,வகைகள், வளர்ச்சி,இனப்பெருக்க முறைகள்,மரணம்,அவற்றுக்கிடையேயான போக்குவரத்துகள்,ஒருங்கிணைப்புகள் குறித்து ஆய்வது திசுள் உயிரியல் ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] திசுள் பண்புகள்
19 ஆம் நூற்றாண்டில் உருப்பெற்ற திசுள் கொள்கையின் படி, எல்லா உயிரினங்களும் ஒன்று அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையிலான திசுள்களால் ஆனவை; ஏற்கெனவே உள்ள திசுள்களில் இருந்து தான் புதிய திசுள்கள் உருவாக முடியும்; ஓர் உயிரினம் உயிர் வாழத்தேவையான அனைத்து முக்கியப்பணிகளும் திசுள்களின் உள்ளே தான் நடைபெறுகின்றன; ஓர் உயிரினத்தின் மரபுத்தகவல்களும் ஒரு திசுளை கட்டுப்பாட்டுடன் இயங்க வைப்பதற்கான தகவல்களும் திசுள்களின் உள்ளேயே பொதிந்துள்ளன.
ஒவ்வொரு திசுளும் தனித்து இயங்க வல்ல சுய சார்புடைய தன்மை உடையது; ஒரு திசுளால் சத்துப் பொருட்களை பெற்றுக்கொள்ளவும், அவற்றை ஆற்றலாக மாற்றவும், சிறப்புப் பணிகளை மேற்கொள்ளவும், இனப்பெருக்கம் செய்யவும் இயலும். இப்பணிகளைச் செய்வதற்கான பிரத்யேகக் கட்டளைகள் ஒவ்வொரு திசுளினுள்ளும் உண்டு.
அனைத்து திசுள்களுக்கும் பொதுவான திறன்களுள் சில:
- திசுள் பகுப்பு மூலம் இனப்பெருக்கம்.
- உயிர்ப் பராமரிப்பு - உணவுப் பொருட்களிலிருந்து ஊட்டச் சத்துக்களைப் பிரித்தெடுத்தல், திசுள் உறுப்புகளை உருவாக்குதல் , ஆற்றல் மூலக்கூறுகளை உருவாக்குதலும் , அதைத் தொடர்ந்து துணை உற்பத்திப் பொருட்களை உருவாக்குவதும் திசுள் உயிர்ப் பராமரிப்புப் பணிகளில் அடங்கும்.உயிர்ப் பராமரிப்பு வழிப்பாட்டைகளின் மூலம் கரிம மூலக்கூறுகளிலிருந்து ஆற்றலை பிரித்து எடுக்க வல்ல திறனே, ஒரு திசுளின் செயல்பாட்டுக்கு முக்கியக் காரணியாகும்..
- புரதங்களை உருவாக்கும் திறன்.
- வெப்ப நிலை மாற்றம், அமிலத்தன்மை மாற்றம், ஊட்டச்சத்து அளவு மாற்றம் போன்ற உள் மற்றும் புறத் தூண்டல்களுக்கான தூண்டற்பேறு
- சிறு குமிழ்களின் போக்குவரத்து.
[தொகு] திசுள் அமைப்பும் பாகங்களும்
முதன்மைக் கட்டுரை: திசுள் அமைப்பும் பாகங்களும்
[தொகு] திசுள் வகைகள்
[தொகு] விலங்குத் திசுள்
முதன்மைக் கட்டுரை: விலங்குத் திசுள்
[தொகு] தாவரத் திசுள்
முதன்மைக் கட்டுரை: தாவரத் திசுள்
[தொகு] ப்ரோகார்யோட் திசுள்
முதன்மைக் கட்டுரை:ப்ரோகார்யோட்கள்
அணுக்கருவும் அதனைச் சுற்றி அணுக்கரு வலையும் இல்லாத திசுள்கள்
[தொகு] யூகார்யோட் திசுள்
முதன்மைக் கட்டுரை:யூகார்யோட்கள்
அணுக்கருவும் அதனை சுற்றி அணுக்கரு வலையும் உள்ள திசுள்கள்
[தொகு] திசுள் வகை பிரிதல்
முதன்மைக் கட்டுரை:திசுள் வகை பிரிதல்
[தொகு] திசுள் வளர்ச்சி
முதன்மைக் கட்டுரை:திசுள் வளர்ச்சி
[தொகு] திசுள் இனப்பெருக்க முறைகள்
முதன்மைக் கட்டுரை:திசுள் இனப்பெருக்க முறைகள்
[தொகு] திசுள் சுழற்சி
முதன்மைக் கட்டுரை:திசுள் சுழற்சி
[தொகு] திசுள்களுக்கிடையேயான போக்குவரத்துகள்,ஒருங்கிணைப்புகள்,தகவல் பரிமாற்றங்கள்
[தொகு] திசுள் மரணம்
முதன்மைக் கட்டுரை:திசுள் மரணம்
[தொகு] திசுள் தற்கொலை
[தொகு] அருஞ்சொற்பொருள்
- திசுள் - Cell (biology)
- திசுள் தற்கொலை - Apoptosis
- திசுள் வகை பிரிதல் - Cell differentiation
- திசுள் சுழற்சி - Cell cycle
- வட்டு - Dish
- செயற்கை முறை வளர்ப்பு - Culture
- சாயம் - Stain (biology)
- சிற்றுறுப்புகள் - Organelles
[தொகு] வெளி இணைப்புகள்
- திசுளைப் பற்றி படத்துடன் விளக்கம் (தமிழில்)