பவானி ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பவானி ஆறு, காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். இது தமிழகத்தின் நீலகிரி மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தோன்றி மேற்கு நோக்கி கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் பாய்ந்து அங்குள்ள முக்கலி என்னுமிடத்தில் 120 பாகை திரும்பி கிழக்கு நோக்கி நீலகிரி மாவட்டத்தில் பாய்ந்து மீண்டும் தமிழகத்துக்குள் வருகிறது.
தமிழக கேரள எல்லையில் தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கி பாயும் ஆற்றை மேல் பவானி அணைக்கட்டு மூலம் தடுத்து பக்தவச்சலம் சாகர் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆறு சமவெளியை அடைகிறது. பின் சிறுமுகை வழியாக கொத்தமங்கலம் அருகே கீழ் பவானி அணைக்கட்டை அடைகிறது அங்கு இது பவானி சாகர் நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. பவானி சாகர் நீர்த்தேக்கத்தில் மோயார் ஆறானது இணைந்து கொள்கிறது.
இது ஈரோடு மாவட்ட சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ளது. பின் பவானி ஆறு கோபிச்செட்டிப்பாளையம் வழியாக பாய்ந்து பவானி நகரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.
அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் பாயும் பவானி ஆற்றில் அணை கட்டி பாரதப்புழா ஆற்றில் திருப்பிவிட கேரள அரசு திட்டமிட்டு வருகிறது.
பெயர்: வாணி ஆறு
[தொகு] உசாத்துணை
- http://www.hinduonnet.com/thehindu/mag/2005/07/24/stories/2005072400010200.htm
- http://209.85.207.104/search?q=cache:GmzNj19xMOQJ:www.narmada.org/sandrp/dec2002_1.doc+location+of+upper+Bhavani+Dam&hl=en&ct=clnk&cd=20&gl=us
- http://www.narmada.org/sandrp/dec2002.pdf
- http://palakkadtourism.org/rivers.php
காவிரி ஆறு |
|
அணைகள் |
பானாசுர சாகர் அணை | Bangara Doddi Nala | கல்லணை | கிருஷ்ணராஜ சாகர் அணை | Madadkatte | மேட்டூர் அணை | மேலணை | |
துணையாறுகள் |
அமராவதி ஆறு | ஆர்க்காவதி ஆறு | பவானி ஆறு | ஹேமாவதி ஆறு | Honnuhole River | கபினி ஆறு | |
நகரங்களும் ஊர்களும் |
காரைக்கால் | குடகு | குசால்நகர் | நாகப்பட்டினம் | பூம்புகார் | சிவசமுத்திரம் | ஸ்ரீரங்கம் | ஸ்ரீரங்கப்பட்டணம் | தலக்காடு | தலைக்காவிரி | தஞ்சாவூர் | திருச்சிராப்பள்ளி |
Physical Features |
வங்காள விரிகுடா | தக்காணப் பீடபூமி | ஒகேனக்கல் அருவி | சிவசமுத்திரம் அருவி | மேற்குத் தொடர்ச்சி மலை |
Riparian States and Union Territories |
கர்நாடகம் | கேரளம் | புதுச்சேரி | தமிழ்நாடு |