பனிக்கரடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பனிக் கரடி | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
காப்பு நிலை | ||||||||||||||
பாதுகாப்பு நிலைமை: பாதிக்கப்படக்கூடியது
|
||||||||||||||
அறிவியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
இருசொற்பெயர் | ||||||||||||||
உர்சுஸ் மரிட்டிமஸ் பிப்ஸ் (Phipps), 1774 |
பனிக்கரடி (துருவக் கரடி, polar bear), நில உருண்டையின் கடும் உறைபனி சூழ்ந்த ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் வெண்ணிறக் கரடி இனமாகும். ஆர்ட்டிக்கு மாக்கடல் என்று இவ் உறைபனிப் பகுதியைக் கூறுவதால், இக்கரடியை வெண் கடற்கரடி என்றும் ஒரோவொருக்கால் கூறுவதுண்டு. இது இறைச்சி உண்ணும் ஊனுண்ணிப்பாலூட்டி. இது நீரிலும் நிலத்திலும் வேட்டையாடவல்லது. இவற்றின் முதன்மையான உணவு சீல் ஆகும். வளர்ந்த ஆண் கரடி 400 முதல் 600 கிலோகிராம் எடையுடையது. பெண் கரடிகள் 200 முதல் 300 கிலோகிராம் எடையுடையவை. இவை இளவேனிற் (வசந்த) காலத்தில் கருத் தரிக்கின்றன. இவற்றின் கருவுற்றிருக்கும் காலம் 240 நாட்களாகும். பொதுவாக இரண்டு குட்டிகள் பிறக்கின்றன. உலகில் ஏறத்தாழ 20000 பனிக் கரடிகள் உள்ளதாகக் கணக்கெடுகப்பட்டுள்ளது.
இதற்கு இயற்கையான வாழிட எதிரிகள் ஏதும் இல்லை (மாந்தனைத் தவிர). கடுங்குளிர்ப்பகுதியாகிய ஆர்ட்டிக்கு நிலத்தில் வாழ முற்றிலும் பழக்கப்பட்டது. 70,000 ஆண்டுகளுக்கு முன்னரான பழைய தொல்படிமப் பதிவுகள் அல்லது தொல்லுயிர் எச்சங்கள்(fossil records) ஏதும் இல்லை சொல்லப்படுகிறது.
[தொகு] வாழிடம், வாழ் எல்லை, வாழ்முறை
இனப்பெருக்கக் காலங்களில் பெண் கரடியுடனும், குட்டிகளுடனும் இருந்தாலும், பனிக்கரடிகள் பொதுவாக தனியாக வாழும் விலங்குகள். ஒரோவொருக்கால் பெரும் திமிங்கிலமோ, வால்ரசுகளோ உண்ணக் கிடைக்கும் பொழுது, 20-30 கரடிகள் போல ஒரே இடத்தில் பார்க்கலாம். உணவு- இவை ஏறத்தாழ 20-25 ஆண்டுகள் வாழும்
[தொகு] அருகி வரும் இனம்
[தொகு] படங்கள்
சர்ச்சில், மனித்தோபா, கனடா அருகே இரண்டு பனிக்கரடிகள். |
|||
சர்ச்சில் முனையில் பனிக் கரடி (வப்புஸ்க்-தேசிய பூங்கா, [[மானிட்டோபா[[, கனடா) |
சர்ச்சில் முனையில் இரண்டு பனிக் கரடிகள் (வப்புஸ்க்-தேசிய பூங்கா, [[மானிட்டோபா[[, கனடா) |