See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
துபாய் ஷொப்பிங் விழா - உலகக் கிராமம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

துபாய் ஷொப்பிங் விழா - உலகக் கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

படிமம்:GV EntDay.jpg
துபாய் ஷொப்பிங் விழா - உலகக் கிராமத்தின் நுழைவாயில்
பகல் தோற்றம்

துபாய் ஷொப்பிங் விழாவில், "குளோபல் வில்லேஜ்" என்று ஆங்கிலத்தில் அறியப்படும் உலகக் கிராமம் ஒரு முக்கியமான அங்கமாகும். ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா முதலிய உலகின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்படுகின்ற பலவகையான உற்பத்திப் பொருட்களும், கலை நிகழ்ச்சிகளும் இங்கே ஒரு சேரக் காட்சியளிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும், முன்னைய ஆண்டிலும் அளவிலும் தரத்திலும் வளர்ச்சியடைந்து செல்லும் இது, 2004 ஆம் ஆண்டில் 58 நாடுகளின் காட்சியகங்களைக் கொண்டுள்ளது. ஓவ்வொரு ஆண்டும், இந்நாடுகள் தங்கள் தங்கள் நாடுகளின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில், புத்துப்புதுக் கருத்து வடிவங்களைக் கொண்டு, இந்தத் தற்காலிகக் கட்டிடங்களைக் கண்கொள்ளாக் காட்சியாகத் தருகின்றன. 2003 ல், ராஜஸ்தான் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி உருவாக்கப்பட்ட இந்தியக் காட்சியகம், சிறந்த காட்சியகமாகத் தெரிவுசெய்யப்பட்டது. 2004 ல், இந்தியக் காட்சியகம் கேரளத்தின் பாணியைத் தழுவியுள்ளது.

படிமம்:GV India-1.jpg
கேரளப் பாணியிலமைந்த இந்தியாவின் காட்சியகம்
இரவுத் தோற்றம். ஜனவரி 2004
படிமம்:GVLanka.jpg
இலங்கையின் காட்சியகம்
இரவுத் தோற்றம். ஜனவரி 2004

இந்த விழா நடைபெறும் ஒரு மாதகாலம் முழுதும், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்து குவியும் மக்களுக்கு இந்த உலகக் கிராமம் ஒரு முக்கிய இலக்காகும். இந்தியா, பாகிஸ்தான், சீனா, சிங்கப்பூர், எகிப்து, சிரியா, தாய்லாந்து, லெபனான் போன்ற நாடுகளின் காட்சியகங்களுக்குள் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அதுபோல வித்தியாசமான கைப்பணிப் பொருட்களால் நிறைந்திருக்கும் ஆபிரிக்க நாடுகளின் காட்சியகங்களும் மக்களைப் பெருமளவில் கவர்கின்றன.

படிமம்:GV China.jpg
சீனாவின் காட்சியகம், இரவுத் தோற்றம்.
ஜனவரி 2004

ஒவ்வோராண்டும் இந்தியா தனது காட்சியகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்படும் அரங்கில் கலைநிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இதேபோல் வேறும் பல நாடுகள் தங்கள் தங்கள் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -