சம்பாதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சம்பாதி (வடமொழி:सम्पाति, sampāti) இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் கழுகு வடிவிலான ஒரு பாத்திரம் ஆகும். இவன் கருடனின் தம்பியான அருணனின் மகன், ஜடாயுவின் அண்ணன்.
சம்பாதியும் ஜடாயுவும், சிறு வயதில் தாம் பெற்ற அபார சக்தியை அநுபவித்துக் கொண்டு ஒரு நாள் ஆகாயத்தில் போட்டி போட்டுக் கொண்டு உயரக் கிளம்பினார்கள். சூரியனை நெருங்க நெருங்க வெப்பம் அதிகரித்து ஜடாயுவைக் கொளுத்தி விடும் போல் இருந்தது. சம்பாதி தன் சிறகுகளை விரித்து ஜடாயுவைக் காப்பற்றினான். ஆனால் சம்பாதியின் சிறகு எரிந்து போயிற்று. சம்பாதி பறக்க முடியாமல் கீழே மலை மேல் விழுந்தான். அன்றிலிருந்து அவன் பறக்க முடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருந்தான்.
இராவணனால் கடத்தப்பட்ட சீதையைத் தேடிச் சென்ற வானரர் படைகள் சம்பாதியைக் கண்டு அவனது தம்பி ஜடாயு இராவணனால் கொல்லப்பட்டது பற்றிக் கூறுகின்றனர். கவலையடைந்த சம்பாதி, இலங்கையில் சீதை சிறையிருப்பதைத் தான் இங்கிருந்தே பார்ப்பதாகக் கூறித் தான் காணும் காட்சியையும் விவரமாகச் சொன்னான். "ராம காரியத்தில் நீ உதவுவாய். அப்படி உதவியபோது உன் சிறகுகள் மறுபடி முளைக்கும்" என்று முன்னர் அவன் பெற்ற வரம் அப்போது பலிக்கலாயிற்று. பேச்சு நடக்கும் போதே இளஞ்சிறகுகள் முளைக்க ஆரம்பித்தன. சம்பாதிக்கு ஏற்பட்ட துன்பமும் நீங்கியது. சிறகுகளைப் பெற்ற சம்பாதி, ஜடாயுவுக்குக் கடலில் கிரியைகள் செய்து திருப்தி அடைந்தான்.
[தொகு] உசாத்துணை
- சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, ராமாயணம், வானதி பதிப்பகம், சென்னை, 2000
வால்மீகியின் இராமாயணம் |
---|
கதை மாந்தர் |
தசரதன் | கௌசல்யா | சுமித்ரா | கைகேயி | ஜனகன் | மந்தரை | இராமர் | பரதன் | இலட்சுமணன் | சத்ருகனன் | சீதை | ஊர்மிளா | குகன் | Mandavi | சுருதகீர்த்தி | விஸ்வாமித்ரர் | அகல்யை | ஜடாயு | சம்பாதி | அனுமன் | சுக்ரீவன் | வாலி | விராதன் | அங்கதன் | Jambavantha | விபீடணன் | தாடகை | சூர்ப்பணகை | மாரீசன் | சுபாகு | கரன் | இராவணன் | கும்பகர்ணன் | மண்டோதரி | மாயாசுரன் | இந்திரஜித் | Prahasta | அக்சயகுமாரன் | Atikaya | இலவன் | குசன் |
மற்றையவை |
அயோத்தி | மிதிலை | இலங்கை | சரயு | திரேத யுகம் | இரகுவம்சம் | இலட்சுமணன் கோடு | ஆதித்ய ஹிருதயம் | Oshadhiparvata | சுந்தர காண்டம் | புஷ்பக விமானம் | வேதவதி | வானரம்
|