See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
இரத்தத் தட்டு - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

இரத்தத் தட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மற்றொருவருடைய உடலில் ஏற்றுவதற்காக ஒரு கொடையாளரிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ள 250 மி.லி. இரத்தத் தட்டுக்கள்
மற்றொருவருடைய உடலில் ஏற்றுவதற்காக ஒரு கொடையாளரிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ள 250 மி.லி. இரத்தத் தட்டுக்கள்

இரத்தத் தட்டு (platelet) என்பது ஒருவகை குருதி அணுத்துகளாகும். இத்தட்டுக்கள் இரத்த உறைதலில் முதன்மையான பங்காற்றுகின்றன. இவற்றின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், இரத்த உறையாமை ஏற்படும் வாய்ப்புண்டு. அதே நேரம், இவற்றின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக இருந்தால் - பொதுவாக, அறிகுறிகள் இல்லாமல் இருப்பினும் - இரத்தக் கட்டுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

[தொகு] அமைப்பு

இரத்தச் சிவப்பணுக்களைப் போன்று, இவையும் அணுக்கரு அற்றவை, மற்றும் தட்டையான வடிவம் கொண்டவை. ஒரு இரத்தத் தட்டின் விட்டம் சராசரியாக 1.5 முதல் 3.0 மைக்ரோ மீட்டர் வரை இருக்கும். பிற அணுக்களைக் காட்டிலும், இவற்றின் எண்ணிக்கை குறைவாதலால், எளிதில் உடல் இவற்றை இழக்க நேரிடும். முறையான அணுக்கரு இல்லாவிடினும், ரைபோ கரு அமிலம் மற்றும் பல கூறுகளும் இவற்றினுள் உண்டு. இவை, இரத்த உறைதல் தேவைப்படும்போது முக்கியப் பங்காற்றுகின்றன.

[தொகு] தோற்றம்

இவை எலும்பு ஊன் எனப்படும் உள் எலும்புத் திசுக்களில் (bone marrow) உருவாக்கப்படுகின்றன. இவற்றின், தோற்ற முன்னோடி அணுக்கள் மெகாகேரியோட்டுகள் எனப்படும் பல அணுக்கருக்கள் கொண்ட அணுக்களாவன. துரோம்போபொயட்டின் என்ற நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர் (hormone) இவற்றின் எண்ணிக்கையை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது. தட்டுக்களோடு இணைந்திருக்கும் இந்நீர், அவற்றின் எண்ணிக்கை குறையின் தனியாக இரத்தத்தில் வழங்கி வரும். அப்போது அது எலும்பு உள் திசுக்களுக்கு தூண்டுகோளாக அமைகிறது. இந்த இயக்குநீர் ஈரலில் சுரக்கப்படுகிறது.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -