See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ஆல்க்கேன் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஆல்க்கேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மீத்தேனின் அமைப்பு
மீத்தேனின் அமைப்பு

ஆல்க்கேன் (alkane) என்பது கரிம வேதியியலில் ஒரு வகையான சேர்வை (மூலக்கூறு) அணுக்களால் ஆன பொருட்கள்.

பொருளடக்கம்

[தொகு] இயல்புகள்

ஆல்க்கேன்கள் என்பவை வளையம் அல்லாத (acyclic) நிறைவுற்ற (saturated) ஹைடிரோகார்பன் (ஐதரோகாபன் அல்லது கரிம-நீரதை) வகைச் சேர்வைகள். இச்சேர்மங்களில் கரிம-கரிம (-C-C-) அணுக்கள் ஒற்றைப் பிணைப்பால் இணைந்திருப்பது இவைகளின் சிறப்பியல்பாகும்.

ஆல்க்கேன்களின் பொது வாய்ப்பாடு CnH2n+2. ஆல்க்கேன்களில் மிகவும் எளிமையான முதல் மூலக்கூறு மெத்தேன் ஆகும். இதில் ஒரு கரிம அணுவும் 4 ஐதரசன் (ஹைட்ரஜன்) அணுக்களும் உள்ளன. ஆல்க்கேனில் உள்ள ஒவ்வொரு கரிம அணுவும் sp3 என்னும் எதிர்மின்னி சுழல் பாதைத் திரிபு கொண்டு இருக்கும். ஆல்கேன்கள் பாராஃபின்கள் (paraffins) என்றும் வழங்கப்படும். கரிம அணுக்கள் ஒரே வரிசையில் நீளமான சங்கிலி போன்ற அமைப்பில் இருக்கும். அவ்வாறன்றிக் கிளைகளாகப் பிரியும் வகைகளுக்கு ஐசோ-பாராஃபின்கள் (இணையான பாராஃபின்கள்) என்று பெயர். ஏறத்தாழ எல்லா ஆல்க்கேன்களும் எரியக்கூடியவை.

[தொகு] கிளைவிடாத நேர்ச் சங்கிலியான ஆல்க்கேன்கள்

இவ்வகை ஆல்க்கேன்களில் முதல் சில மூலக்கூறுகள்:

[தொகு] ஐதரோ காபன்களின் மூலங்கள்

இயற்கையில் ஐதரோகாபன்களின் கலவைகள் பூமியின் அடியில் பெட்ரோலியம், இயற்கை வாயு எனப் பரந்து கிடக்கின்றன. பெட்ரோலியம் கடல்னடியில் ஆழத்திலுள்ள கரிமப் பொருட்கள் சிதைவடைவதால் தோன்றுகின்றன. இயற்கை வாயுவில் பெரும்பகுதி மெத்தேனும், எத்தேன், புரொப்பேன் போன்ற வாயுக்கள் காணப்படுகின்றன.

ஆல்க்கேன்களின் மூலக்கூறிலுள்ள கரிம அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள ஐதரோகாபன்களை சுமார் 673-873K வெப்பநிலைக்கு உலோக ஒக்சைட்டுகள் (உலோக ஆக்ஸைடுகள்) முன்னிலையில் வெப்பப்படுத்தும்போது அவை குறைந்த கரிம அணுக்களைக் கொண்ட ஆல்க்கேன்களாக பிரிவடைகின்றன. இது ஐதரோகாபன்களின் பிளப்பு எனப்படும்.

[தொகு] இயற்பியல் பண்புகள்

இவற்றின் மூலக்கூறு எடை அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் கொதிநிலை, உருகுநிலை, அடர்த்தி ஆகியன முறையே அதிகரிக்கின்றன. முதல் நான்கு ஆல்கேன்கள் வாயு (வளிம) நிலையிலும் அடுத்த 13 (C5-C17 ஆல்க்கேன்கள் நீர்ம (திரவ) நிலையிலும் C17க்கு மேற்பட்டவை திண்ம நிலையிலும் காணப்படுகின்றன. கரிமத்தின் எண்ணிக்கை அதிகரிக்க n-ஆல்கேன்களின் கொதிநிலை அந்த மூலக்கூறின் பரப்பளவைப் பொருத்தது. குறைவான பரப்பளவு உள்ள ஹைடிரோகார்பன் குறைந்த கொதிநிலை கொண்டிருக்கும். அதிக பரப்பளவு கொண்ட மூலக்கூறுகள் அதிக கொதிநிலை கொண்டிருக்கும். கொதிநிலை உயர்வதற்கு அம்மூலக்கூறுகளிடையே உள்ள வாண்டர்வாலின் கவர்ச்சி விசை (Van der Waal's forces of attraction) காரணமாக அமைகிறது. ஆல்கேன்கள் மின்சாரத்தை நன்றாகக் கடத்துவதில்லை, அதே போல மின் புலத்தாலும் அதிக மாற்றம் அடைவதில்லை (முனையொழுக்கு முனை ஒசிவு (polaraization) கொள்ளுதல் இல்லை). நீரிலும் கரைவதில்லை. நீரை விலக்கும் (ஒதுக்கும்) (hydrophobic) பண்புடையது

[தொகு] பயன்கள்

  • குறைந்த கரிம அணுக்களைக் கொண்ட ஆல்க்கேன்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன.
  • அதிக கரிம அணுக்களைக் கொண்ட ஆல்க்கேன்கள் கரைப்பான்களாகப் பயன்படுகின்றன.
  • கருப்பு மசி, மோட்டார் டயர்களில் பயன்படுத்தப்படும் நிறப்பொருள் ஆகியன தயாரிக்க உதவும். நுண்கரி தயாரிக்க மெத்தேன் பயன்படுகிறது. மெத்தேனை 1273K க்கு வெப்பப்படுத்தும்போது நுண்கரி கிடைக்கிறது.

[தொகு] இவற்றையும் பார்க்க


 

ஆல்க்கேன்கள்

மெத்தேன்
CH4

|
 

எத்தேன்
C2H6

|
 

புரொப்பேன்
C3H8

|
 

பியூட்டேன்
C4H10

|
 

பென்ட்டேன்
C5H12

|
 

ஹெக்சேன்
C6H14

ஹெப்ட்டேன்
C7H16

|
 

ஆக்டேன்
C8H18

|
 

நோனேன்
C9H20

|
 

டெக்கேன்
C10H22

|
 

ஆண்டெக்கேன்
C11H24

|
 

டோடெக்கேன்
C12H26

 


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -