See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சின்னம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சின்னம்
ஆல் சோல்ஸ் கல்லூரியின் முன் வளாகம்
ஆல் சோல்ஸ் கல்லூரியின் முன் வளாகம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமானது இங்கிலாந்தில், ஆக்ஸ்போர்டு என்னும் நகரத்தில் அமைந்துள்ள தொன்மைப் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகமாகும். இதுவே ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் யாவற்றினும் பழமை வாயந்ததாகும். இதன் தொடக்கம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் எனக் கூறுவர். இதன் தொடக்க நாள் துல்லியமாகத் தெரியவில்லை. எனவே இன்றுவரை இது சுமார் 900 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து உயர் கல்வி நிறுவனமாக இருந்து வந்துள்ளது. ஆக்ஸ்போர்டு நகர மக்களுக்கும் இப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் இடையே கி.பி. 1209ல் எழுந்த சண்டையினால் சில மாணவர்கள் வட-கிழக்கான திசையில் உள்ள கேம்பிரிட்ஜ் என்னும் ஊருக்கு ஓடிச் சென்றனர் என்றும், அதனாலேயே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உருவானது என்றும் ஒரு தொல்கதை உண்டு. இதனால் இன்றளவும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கும் இடையே போட்டாப் போட்டி உண்டு. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமானது இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.

இப் பல்கலைக்கழகமானது 39 கல்லூரிகள் கொண்ட ஒரு பெரும் நிறுவனம். இதில் 2006 ஆம் ஆண்டுக் கணக்கின் படி 22,640[1] மாணவர்கள் படிக்கின்றார்கள். அவற்றில் 15,495[1] மாணவர்கள் பட்டப் படிப்புக்காவும், 7,145[1] மாணவர்கள் மேற்பட்டப் படிப்புக்காகவும் பயில்கின்றார்கள். இப் பல்கலைக்கழகமானது சுமார் 3.6 பில்லியன் பிரித்தானிய பவுண்டு நிறுவன வளர்ச்சித் தொகையாகப் பெற்றுள்ளது.

[தொகு] வெளி இணைப்புகள்

[தொகு] மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Table 0a - All students by institution, mode of study, level of study, gender and domicile 2004/05. Higher Education Statistics Agency online statistics. இணைப்பு 2006-11-18 அன்று அணுகப்பட்டது.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -