பெண்ணியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு.
சமத்துவமின்மையின் மூலங்கள், சமத்துவத்தை அடைவதற்கான வழிமுறைகள், பால் மற்றும் பால்நிலை அடையாளங்களை விமர்சிப்பது, கேள்விக்குட்படுத்துவதற்கான எல்லைகள் போன்றன தொடர்பில் பெண்ணியவாதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. பால் அடையாளங்களான ஆண் - பெண் போன்றவை வெறுமனே சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவையே என்ற வாதங்களும் உள்ளன.
தற்காலப் பெண்ணியவாதிகள் பெண்ணியத்தை இன, சமூக, கலாசார, மத எல்லைகளைக் கடக்கும் அடிப்படை இயக்கமாகக் கருதுகின்றனர். ஒரு வினைத்திறன்மிக்க பெண்ணிய இயக்கமானது வன்புணர்ச்சி, தகாப்புணர்ச்சி, பாலியற் தொழில் போன்ற பொதுப்பிரச்சினைகளையும் குறித்த சமூகங்களுக்குரிய சிறப்புப் பிரச்சினைகளையும் கவனத்திலெடுக்க வேண்டும் என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.
பொருளடக்கம் |
[தொகு] தமிழ்ச் சூழலில் பெண்ணியம்
தமிழ்ச்சூழலில் பெண்ணியம் இலக்கியம், அரசியல் ஆகிய இரு தளங்களில் பரவலாகச் செயற்பாட்டில் இருக்கிறது. பெண் நிலைப் பார்வை குறித்த பிரக்ஞையும் தேவையும் அதிகரித்துவரும் வளர் நிலையில் ஏராளமான பெண்கள் பங்குபற்றும் இலக்கிய இயக்கங்களும் அரசியல் இயக்கங்களும் தமிழ்ச்சூழலில் உருவாகி வருகின்றன.
[தொகு] பெண்ணியத்தின் வகைப்பாடுகள்
பெண்ணியம் சார்ந்து இயங்கும் சக்திகளின் சமூக, அரசியல், கோட்பாட்டுச் சார்பு நிலைகளைக்கொண்டு பெண்ணியம் பல வகைப்பாடுகளுள் அடக்கப்படுகிறது. விமர்சனம், ஆய்வு முயற்சிகளை இலகுபடுத்தவும், வேறு பல தேவைகளுக்குமாகச் செய்ய்ப்படும் இத்தகைய வகைப்படுத்தல் முழுமையானதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
[தொகு] உலக அளவில் பெண்ணிய வகைப்பாடுகள்
[தொகு] தமிழ்ச் சூழலில் பெண்ணிய வகைப்பாடுகள்
- மார்க்சியப் பெண்ணியம்
- தலித் பெண்ணியம்
- தேசியப் பெண்ணியம்
- இந்து மதப் பெண்ணியம்
- இஸ்லாமியப் பெண்ணியம்
- மரபுசார் பெண்ணியம்
- தீவிரப் பெண்ணியம்