Web Analytics

See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
பத்திரிசு லுமும்பா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பத்திரிசு லுமும்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பத்திரிசு லுமும்பா
Patrice Lumumba
பத்திரிசு லுமும்பா

பதவியில்
ஜூன் 24, 1960 – செப்டம்பர் 14, 1960
Deputy அன்டோன் கிசெங்கா
முன்னிருந்தவர் பெல்ஜிய கொங்கோ
பின்வந்தவர் ஜோசப் இலேயோ

பிறப்பு ஜூலை 2 1925
ஒனலூவா, கட்டக்கொக்கொம்பே, பெல்ஜிய கொங்கோ
இறப்பு ஜனவரி 17 1961 (அகவை 35)
எலிசபெத்வில், கட்டாங்கா
அரசியல் கட்சி கொங்கோ தேசிய இயக்கம்

பத்திரிசு எமெரி லுமும்பா (Patrice Émery Lumumba), (ஜூலை 2, 1925ஜனவரி 17, 1961) ஆபிரிக்கத் தலைவரும் கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமரும் ஆவார். இவரே பெல்ஜியத்திடம் இருந்து தமது நாட்டை ஜூன் 1960 இல் விடுதலை பெற உதவிய தலைவர். ஆனாலும் 10 வாரங்களின் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் போது கைது செய்யப்பட்ட பத்திரிசு லுமும்பா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைச் சுருக்கம்

லுமும்பா பெல்ஜிய கொங்கோவில் டெட்டெலா என்ற இனத்தில் பிறந்தவர். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு அரச அஞ்சல் சேவையில் ஊழியராகச் சேர்ந்தார். 1955 இல் பெல்ஜியம் லிபரல் கட்சியில் இணைந்தார். 3 வாரத்துக்கு படிப்பு காரணமாக பெல்ஜியம் சென்றவர் அங்கு அஞ்சல் சேவைப் பணத்தைக் கையாட முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டாண்டுகள் சிறை வைக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் இக்குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டு 12 மாதங்களில் ஜூலை 1956 இல் விடுதலையானார். இதன் பின் அவர் நாடு திரும்பி கொங்கோ தேசிய இயக்கம் என்ற பெயரில் ஓர் இயக்கத்தை 1958 இல் ஆரம்பித்து பின்னர் அதன் தலைவரும் ஆனார். டிசம்பர் 1958 இல் கானாவில் இடம்பெற்ற அனைத்து ஆபிரிக்க மக்கள் மாநாட்டில் லுமும்பா பங்குபற்றினார்.

லுமும்பாவின் கொங்கோ தேசிய இயக்கம் நாட்டில் நடநத உள்ளூராட்சித் தேர்தல்களில் பெரும்பான்மை பெற்று வென்றது. அதே நேரத்தில் கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு ஜனவரி 18, 1960 இல் பிரசல்சில் நடந்தது. இம்மாநாட்டில் லுமும்பாவும் கலந்து கொண்டார். ஜனவரி 27 இல் மாநாட்டில் கொங்கோவின் விடுதலை அறிவிக்கப்பட்டது. மே, 1960 இல் நடந்த பொதுத்தேர்தலில் லுமும்பாவின் கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதனை அடுத்து ஜூன் 23, 1960 இல் லுமும்பா நாட்டின் பிரதமரானார். கொங்கோவின் விடுதலை ஜூன் 30, 1960 இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விடுதலை நாளன்று பத்திரிசு லுமும்பா தனது முதலாவது புகழ் பெற்ற உரையை நாட்டு மக்களுக்கு வழங்கினார்[1].

லுமும்பா பிரதமரான சில நாட்களுக்குள்ளேயே இராணுவத்தினர் தவிர மற்றைய அரசு ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வை வழங்கினார். இது இராணுவத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தைஸ்வில் இராணுவ முகாமில் இராணுவத்தினர் தமது மேலதிகாரிகளின் மீது தாக்குதல்களைத் தொடங்கினர். இது பின்னர் பல இடங்களுக்கும் பரவியது. விரைவில் சட்டம், ஒழுங்கு நாட்டில் இல்லாமலே போனது. பல ஐரோப்பியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்[2].

[தொகு] சோவியத் ஆதரவு

கட்டாங்கா மாகாணம் ஜூன் 1960 இல் மொயிஸ் த்சோம்பே தலைமையில் பெல்ஜியத்தின் ஆதரவுடன் தனது விடுதலையை அறிவித்தது. ஐநா படைகள் வரவழைக்கப்பட்டன. இதனால் லுமும்பா சோவியத் ஒன்றியத்தின் உதவியைக் கோரினார்.

[தொகு] கைது

பத்திரிசு லுமும்பா
பத்திரிசு லுமும்பா

செப்டம்பர் 1960 இல் லுமும்பாவின் அரசு அதிபரினால் சட்டத்துக்கு மாறாக கலைக்க அறிவித்தார். மாற்றாக, லுமும்பா அதிபர் காசா-வுபுவின் பதவியைப் பறிக்க முயன்றார். செப்டம்பர் 14, 1960 இல் சிஐஏஇன் ஆதரவுடன் இராணுவத் தளபதி ஜோசப் மோபுட்டு இராணுவப் புரட்சியை மேற்கொண்டு லுமும்பாவை அரசு பதவியில் இருந்து கலைத்தார்[2]. லுமும்பா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஐநா படைகள் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். வீட்டுக் காவலில் இருந்து தப்பித்த லுமும்பா ஸ்டான்லிவில் நோக்கி நீண்ட தூர பயணத்தை மேற்கொண்டார். ஆனாலும் மொபுட்டுவின் படையினரால் அவர் டிசம்பர் 1, 1960 இல் போர்ட் ஃபிராங்கி என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். உள்ளூர் ஐநா அலுவலகத்திடம் அவர் முறையிட்ட போதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கின்ஷாசா நகருக்கு கொண்டு செல்லப்பட்டார் லுமும்பா. இராணுவத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாகவும் வேறு பல குற்றச்சாட்டுக்கள் லுமும்பாவுக்கெதிராக சுமத்தப்பட்டன. ஐநா செயலர் டாக் ஹமாஷெல்ட் சட்டத்தின் மூலம் மட்டுமே லுமும்பா விசாரிக்கப்படவேண்டும் என கொங்கோ அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார். சோவியத் ஒன்றியம் லுமும்பா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

ஐநா பாதுகாப்புச் சபையில் லுமும்பாவிற்கு ஆதரவாக சோவியத் யூனியன் டிசம்பர் 14, 1960 இல் கொண்டுவந்த தீர்மானம் 8-2 வாக்குகளால் தோற்றுப் போனது. ஐநா செயலருக்கு கொங்கோ விவகாரத்தில் அதிக அதிகாரம் அளிக்க மேலை நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை சோவியத் ஒன்றியம் தனது வீட்டோ பலத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது.

லுமும்பாவின் பாதுகாப்புக் கருதி அவர் கட்டங்கா மாகாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

[தொகு] லுமும்பாவின் இறப்பு

ஜனவரி 17, 1961 இல் லுமும்பா பெல்ஜிய அதிகாரத்துக்குட்பட்ட கட்டங்காவில் பலமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்[3]. அதே நாளிரவு காடொன்றினுள் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்றவர்களில் இருவர் கப்டன் ஜூலியென் காட் மற்றும் காவற்துறை அதிபர் வேர்ஷூரே ஆகியோர். இவர்கள் இருவரும் பெல்ஜிய நாட்டவர்கள் எனப்து குறிப்பிடத்தக்கது[4]. கொங்கோ அதிபர் மற்றும் இரு அமைச்சர்களும் லுமும்பா சுடப்படும் போது அங்கு இருந்திருக்கிறார்கள். லுமும்பாவுடன் சேர்ந்து அவரது இரு ஆதரவாளர்களும் அப்போது சுட்டுக் கொல்லப்பட்டனர். லுமும்பாவின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. பெல்ஜியத் தகவல் படி இக்கொலைகள் ஜனவரி 17, 1961 இரவு 9:40 க்கும் 9:43 க்கு இடையில் இடம்பெற்றது.

மூன்று வாரங்களின் பின்னரேயே லுமும்பாவின் இறப்பு அறிவிக்கப்பட்டது. லுமும்பா சிறையில் இருந்து தப்பிக்க முயன்றதாகவும் ஆத்திரமடைந்த ஊர்வாசிகளே அவரைக் கொலை செய்ததாகவும் உள்ளூர் வானொலி தகவல் தந்தது.

லுமும்பாவின் இறப்பு அறிவிக்கப்பட்டதும் பல ஐரோப்பிய நகரங்களில் பெல்ஜிய தூதரகங்களின் முன்னர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.[1]

1961 சோவியத் அஞ்சல் தலை
1961 சோவியத் அஞ்சல் தலை

[தொகு] நினைவுச் சின்னங்கள்

[தொகு] மேற்கோள்கள்

  1. Independence Day Speech. Africa Within.
  2. 2.0 2.1 Larry Devlin, Chief of Station Congo, 2007, Public Affairs, ISBN 1-58648-405-2
  3. Correspondent:Who Killed Lumumba-Transcript. BBC. 00.35.38-00.35.49
  4. Correspondent:Who Killed Lumumba-Transcript. BBC. 00.36.57
  5. http://www.cnn.com/WORLD/9707/26/russia.university/
  6. http://news.bbc.co.uk/1/hi/world/africa/3321575.stm

[தொகு] வெளி இணைப்புகள்

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu