ஹிப் ஹொப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹிப் ஹொப் ஓர் இசை வகையும் கலாசார அசைவியக்கமுமாகும். இது 1970களிலிருந்து ஆபிரிக்க அமெரிக்கர்களாலும் இலத்தீன் அமெரிக்கர்களாலும் நியூயோர்க் நகரத்தில் உருவாக்கப்பட்டதாகும். 1970களில் நியோர்க்கின் புறொன்க்ஸ் பகுதியில் தோன்றிய ஹிப் ஹொப் இசை பின்னர் ஒரு வாழ்க்கைமுறையாக மாறியது. இன்று ஹிப் ஹொப் கலாசாரம் தேசிய, இன, மத அடையாளங்களைத் தாண்டி உலகெங்கும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. ஹிப் ஹொப் பண்பாட்டில் உள்ளிட வகுப்புகள் ராப் இசை, தடை ஆட்டம், சுவரோவியம் (Graffiti), Beat-boxing, Turntablism (DJ கலை) ஆகும்.