விக்டோரியா ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விக்டோரியா ஏரி அல்லது விக்டோரியா நியான்சா (உகெரெவே அல்லது நலுபாலே என்றும் வழங்கப்படுகிறது) ஆப்பிரிக்காவில் உள்ள மாபெரும் ஏரிகளுள் (Great Lakes) ஒன்றாகும்.
விக்டோரியா ஏரியின் பரப்பளவு 68,800 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதுவே இக்கண்டத்தின் மிகப்பெரிய ஏரியாகும். மேலும் இது உலகின் வெப்பமண்டலத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியும் (Tropical Lake), உலகின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியும் ஆகும். இதனுடைய அதிகபட்ச ஆழம் 84 மீட்டர்கள் ஆகும். இதன் சராசரி ஆழம் 40 மீட்டர்கள் ஆகும். இதன் கொள்ளளவு 2,750 கனகிலோமீடர்கள் ஆகும்.
இதுவே நைல் ஆற்றின் நீளமான கிளையாகிய வெள்ளை நைல் ஆற்றின் மூலம் ஆகும்.