வனேடியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
||||||||||||||||||||||||||||||||||
பொது | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர்,குறி எழுத்து, தனிம எண் |
வனேடியம், V, 23 | |||||||||||||||||||||||||||||||||
வேதிப்பொருள் வரிசை | பிறழ்வரிசை மாழை | |||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடைக்குழு, எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..) |
5, 4, d | |||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | வெள்ளிய-சாம்பல் மாழை |
|||||||||||||||||||||||||||||||||
அணு எடை | 50.9415(1) g·mol−1 | |||||||||||||||||||||||||||||||||
எதிர்மின்னிகள் அமைப்பு | [Ar] 3d3 4s2 | |||||||||||||||||||||||||||||||||
சுற்றுப்பாதைகளில் எதிர்மின்னிகள் |
2, 8, 11, 2 | |||||||||||||||||||||||||||||||||
இயல்பியல் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
இயல் நிலை | திண்மம் | |||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அறை வெப்பநிலை) |
6.0 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||
உருகுநிலையில் நீர்ம அடர்த்தி |
5.5 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||
கொதி நிலை | 2183 கெ, K (1910 °C, 3470 °F) |
|||||||||||||||||||||||||||||||||
உருகு வெப்பநிலை |
3680 கெ, K (3407 °C, 6165 °F) |
|||||||||||||||||||||||||||||||||
உருகுநிலை வெப்பம் | 21.5 கிஜூ.மோல்−1, (kJ·mol−1) |
|||||||||||||||||||||||||||||||||
வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
459 கிஜூ.மோல்−1, (kJ·mol−1) |
|||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | (25 °C) 24.89 J·mol−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||
அணு அமைப்பியல் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | கட்டகம், உடல்நடு | |||||||||||||||||||||||||||||||||
ஆக்ஸைடு நிலைகள் | 2, 3, 4, 5 (amphoteric ஆக்ஸைடு) |
|||||||||||||||||||||||||||||||||
எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு | 1.63 (Pauling scale) | |||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல்கள் ()more |
1st: 650.9 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||
2nd: 1414 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||
3rd: 2830 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||
அணுவின் ஆரம் | 135 pm பிமீ | |||||||||||||||||||||||||||||||||
அணுவின் ஆரம் (கணிப்பு) | 171 pm | |||||||||||||||||||||||||||||||||
கூட்டுப்பிணைப்பு ஆரம் | 125 pm | |||||||||||||||||||||||||||||||||
பிற இயல்பியல் வேதியியல் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | paramagnetic | |||||||||||||||||||||||||||||||||
மின் தடைமை | (20 °C) 197 nΩ·m | |||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கடத்துமை | (300 K) 30.7 W·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||
வெப்ப நீட்சி | (25 °C) 8.4 µm·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||
ஒலியின் விரைவு (மெல்லிய கம்பி) |
(20 °C) 4560 மீ/நொ (m/s) | |||||||||||||||||||||||||||||||||
யங் தகைமை (Young's modulus) | 128 GPa | |||||||||||||||||||||||||||||||||
நழுவு தகைமை (Shear modulus) |
47 GPa | |||||||||||||||||||||||||||||||||
பரும தகைமை(Bulk modulus) | 160 GPa | |||||||||||||||||||||||||||||||||
பாய்சான் விகிதம் (Poisson ratio) |
0.37 | |||||||||||||||||||||||||||||||||
மோவின் கெட்டிமை (Mohs hardness) |
6.7 | |||||||||||||||||||||||||||||||||
விக்கெர் கெட்டிமை | 628–1500 MPa | |||||||||||||||||||||||||||||||||
`பிரிநெல் கெட்டிமை | 628– MPa | |||||||||||||||||||||||||||||||||
CAS எண் | 7440-62-2 | |||||||||||||||||||||||||||||||||
தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள் | ||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||
மேற்கோள் குறிப்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
வனேடியம் (ஆங்கிலம்: Vanadium, (IPA: /vəˈneɪdiəm/) என்னும் வெண்-சாம்பல் நிற வேதிப்பொருள் உலகில் அதிக அளவில் காணப்படாத, மென்மையான, வளையக்கூடிய, தகடாககூடிய மாழை ஆகும். இத் தனிமத்தின் அணுவெண் 23 ஆகும். இது இயற்கையில் கிடைக்கும் கனிமப்பொருட்களில் இருந்து பிரிக்கப்படுவது. வனேடியம் பெரும்பாலான உயிரினங்களில் இருக்கும் 26 தனிமங்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் பிற மாழைகளுடன் கலந்து மாழைக்கலவையாகப் பயன்படுகின்றது.
வனேடியம் பலவகையான காரக் கரைசல்கள் மற்றும் சல்ஃவூரிக் காடி, ஹைட்ரோகுளோரிக் காடி முதலியவற்றால் தாக்குறாது (அரிப்பு ஏற்படாமல்) இருக்கின்றது. இது மாழை வகையைச் சேர்ந்ததாயினும் குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்று இதன் ஆக்ஸைடுகள் காடித் தன்மை உடையன.
வனேடியத்தின் பொதுவான ஆக்ஸைடு நிலைகளில் +2, +3, +4, +5 ஆகியனவும் அடங்கும். அமோனியம் வனடடேட் NH4VO3 ஐக் கொண்டு செய்து காட்டப்படும் ஒரு சோதனையில், துத்தநாகத்தால் சிதைவுற்று வனேடியத்தின் நான்கு ஆக்ஸைடு நிலைகளையும் வெவேறு நிறம் தருவதால் காட்டமுடியும். பொதுவாக +1 ஆக்ஸைடு நிலை நிகழ்வது அரிது.
[தொகு] பயன்பாடுகள்
- உற்பத்தி செய்யப்படும் வனேடியத்தில் ஏறத்தாழ 80% வனேடியம், இரும்பு-எஃகில் கூட்டுப்பொருளாகப் பயன்படுவதற்கு செலவாகின்றது.
- சிறிதளவு வனேடியம் எவர்சில்வர் எனப்படும் துருப்பிடிக்கா எஃகிலும் (அறுவை மருத்துவம், கருவிகள் முதலியவை), துருப்பிடிக்கா, மிகுவிரைவில் இயங்கும் கருவிகளிலும் பயன்படுகின்றது.
- வனேடியம், வானூர்தி பீய்ச்சுந்துகளிலும், மிகுவிரைவில் செல்லும் வானூர்தி உடல்பகுதிகளிலும் பயன்படும் அலுமினிய மற்றும் டைட்டேனியக் கலவைகளில் பயன்படுத்தப்படுகின்றது.
- வனேடிய எஃகுக் கலவைகள் பலவகையான ஊர்திகளில் அச்சுத் தண்டிலும், பல்லிணைகளிலும் (gears) பயன்படுத்தப்படுகின்றது.
- எஃகுகளில் கார்பைடு-நிலைப்படுத்தியாகப் பயன்படுகின்றது
- அணுப்பிளவு சிதைவு வாய்ப்பு குறைவாக உள்ளதால், அணுநிலையங்களில் இதன் பயன்பாடு உள்ளது.
- வனேடிய-காலியம் நாடா, மீகடத்திவழி செலுத்தும் மின்னோட்டத்தால் இயங்கும் மிகுகாந்தப்புலம் தரும் காந்தங்களில் (175,000 காஸ் (gauss)).பயன்படுத்தப்படுகின்றது
- சல்ஃவூரிக் காடி உற்பத்தியில் வனேடியம் பெண்ட்டாக்ஸைடு, V2O5, ஒரு வினையூக்கியாகப் பயன்படுகின்றது. சுட்டாங்கல் (செராமிக்ஸ் ceramics) செய்யவும் பயன்படுகின்றது.
- வனேடியம் டை-ஆக்ஸைடு (VO2) பூசப்ட்ட கண்ணாடிகள் கண்ணுக்குப் புலப்படா அகச்சிவப்பு அலைகளைத் தடுக்கும் ஆனால் கண்ணுக்குப் புலப்படும் ஒளியைத் தடுப்பதில்லை (ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில்).
- மின்கலங்களிலும் மின் ஆற்றல் கலங்களிலும் (Electrical fuel cells) பயன்படுகின்றது.
- பழங்காலத்தில் தென் இந்தியாவில் செய்த வூட்ஸ் எஃகு (Wootz) என்னும் வலுமிக்க எஃகில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது (இதுவே டமாஸ்க்கஸ் எஃகு (amascus steel) எனப்பட்டதும்)