மோசே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மோசே அல்லது மோயீசன் (இஸ்லாம்: மூசா), எபிரேய விடுதலை தலைவர், தீர்க்கதரிசி மற்றும் யூதரது வரலாற்றில் முக்கிய நபருமாவார்.
[தொகு] விவிலியத்தில் மோசே
கிறிஸ்தவ விவிலியத்தின் யாத்திராகமம் நூலில் மோசேயின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. இதன் படி மோசேயின் தந்தை அம்ராம் ஆவார் அவரது தாய் யோகெபேத் ஆவார். மோசே இஸ்ரவேலின் லேவி எனப்பட்ட குருத்துவ குலத்தில் பிறந்தார். மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்தில் அவர்களது அடிமை வாழ்விலிருந்து விடுவித்து பாலைவனமூடாக இஸ்ரவேல் மக்களை கானான் நாடு நோக்கி (தற்போதைய இஸ்ரவேல் பலஸ்தீன நாடுகள் உள்ள பிரதேசம்) வழிநடத்தி சென்றார். மேலும் வழியில் கடவுள் சீனாய் மலை மீது இறைவனது திருச்சட்டத்தை கொடுத்தார். இச்சட்டமே இயேசு வரும் வரைக்கும் மாற்றமின்றி பயன்படுத்தப்பட்ட சட்டமாகும். மோசே வாழ்ந்த காலம் பற்றிய கணக்கீடுகளின் படி மோசே கி.மு. 13-16ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே வாழ்ந்ததாக கருதப்படுகிறது.
மோசே ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தை முதமுதலாக எடுத்து கூறியவராவார். இது கடவுள் மோசே மூலமாக கொடுத்த பத்து கட்டளைகளில் முதலாவதாகும். மோசே கிறிஸ்தவ,இஸ்லாம்,யூத,மற்றும் பஹாய் சயங்களில் ஒரு முக்கிய தீர்க்கதரிசியாக கொள்ளப்படுகிறார்.
[தொகு] பிறப்பும் குழந்தை பருவமும்
மோசே, இஸ்ரவேலர் எகிப்தில் பார்வோன் அரசனின் ஆட்சியில் அடிமைகளாக இருக்கும் போது ஒரு அடிமை பெற்றோருக்கு பிறந்தார். அச்சமயம் இஸ்ரவேலரின் சனத்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் பார்வோன் எகிப்தில் ஒரு சட்டத்தை பிறப்பித்திருந்தான். அதன் படி இஸ்ரவேலருக்கு பிறந்த சகல ஆண் குழந்தைகளும் நைல் நதியில் வீசி கொலை செய்யப்பட வேண்டும். விவிலியத்தில் இந்த பாராவோ யார் என குறிப்பிடப்படவில்லை. அனால் ஆய்வாளரின் கருத்துப்படி மூன்றாவது துட்டுமோஸ் (Thutmose III) அல்லது இரண்டாம் ரம்சீஸ் (Ramses II) என கருதப்படுகிறது.
மோசே பிறந்தவுடன் அவரது தாய், குழந்தை அழகுள்ளது எனக்கண்டு, குழந்தயை நதியிலெறிய மனதில்லாது ஆறுமாதம் வரை குழந்தையை வீட்டில் ஒளித்து வைத்தார். மேலும் குழந்தையை ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை கிடத்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். குழந்தைக்கு என்ன நடக்கும் என்பதை அறியும்படி அதன் தமக்கை தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது பார்வோனுடைய மகள் நதியில் நீராட வந்தாள் அவளுடைய தாதிகள் நதியோரத்தில் இருந்தார்கள். இளவரசி நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள் பிள்ளை அழுதது அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது இஸ்ரவேல் பிள்ளைகளில் ஒன்று என ஊகித்துக்கொண்டாள்.
அப்பொழுது இதை பாத்துக் கொண்டிருந்த குழந்தையின் தமக்கை பார்வோனின் மகளை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி இஸ்ரவேல் பெண்களில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா? என்றாள். அதற்கு இளவரசி இனங்கவே அவள் போய் குழந்தையின் தாயையே அழைத்துக் கொண்டுவந்தாள். பின்னர் இளவரசி குழந்தயை அவளிடம் கொடுத்து குழந்தை பால் மறக்கும் வரை வளர்ர்கும் பொறுப்பை கொடுத்தார். அதற்காக சம்பளமும் கொடுத்தாள்.அப்படியே குழந்தை தன் சுய தயிடமே வளர்ந்தது. பிள்ளை பெரியவனானபோது, அவள் அதைப் பார்வோனுடைய மகளிடத்தில் கொண்டுபோய் விட்டாள். பார்வோனுடைய மகள் அவனை நீரிலிருந்து எடுத்தேன் என்று பொருள்படும்படி, குழந்தைக்கு மோசே என்று பெயரிட்டாள்.ru-sib:Мосей