Web Analytics

See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
பத்துக் கட்டளைகள் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பத்துக் கட்டளைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பத்துக் கட்டளைகள்
பத்துக் கட்டளைகள்

பத்துக் கட்டளைகள் அல்லது கற்பனகள் என்பது சமய, மனிதநேய விதிகளின் பட்டியலாகும். இது விவிலியத்தின் படி சீனாய் மலை மீது கடவுளால் கற்பலகைமேல் எழுதி மோசே மூலமாக இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது.[1] கற்பனைகள் என்ற சொல் விவிலியத்தில் யாத்திராகமம் 34:28 இல் காணப்படுகிறது. ஜேம்ஸ் மன்னன் பதிப்பு "பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கை" [2] என்ற பதத்தைப் பாவிக்கையில், விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு உடன்பயிகை என்ற பததை பாவிக்கிறது. [3]

பொருளடக்கம்

[தொகு] முன்னாயத்தம்

விவிலியத்தின் படி, பத்துக் கட்டளைகள் என்பது கடவுள் சினாய் மலையில் இருந்து இஸ்ரவேலருக்கு பேசி உறைத்த வார்த்தைகளாகும். இது கடவுளால் நேரடியாக கற்பலகைகள் இரண்டின் மீது எழுதப்பட்டு மோசே மூலம் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் இஸ்ரவேலர் எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு மூன்றாம் மாதம் அவர்கள் சீனாய் மலையடிவாரத்துக்கு வந்தபோது நடந்தது. கட்டளைகள் கொடுக்கப்பட முன்னர் மக்கள், இரண்டு நாட்கள் பரிசுத்தமாக இருக்கப் பணிக்கப்பட்டனர்.[4] அவர்கள் பரிசுத்தமாக்கப்படும்படி பின்வருவனவற்றை செய்ய கட்டளையிடப்பட்டது:

  1. உடைகளை கசக்கி தூயப்படுத்தல் (19:10)
  2. உடலுறவு கொள்ளாதிருத்தல் (19:15)

மேலும் மூன்றாம் நாள் வரை மலையச்சுற்றி ஒரு எல்லை குறிக்கப்பட்டு அதனுள் யாரும் வராமலிருக்க உத்தரவிடப்பட்டது.

[தொகு] விவிலிய வசனம்

பின்வரும் விவிலிய வசனமானது பத்துக்கட்டளை எனப் பொதுவாக ஏற்கப்பட்டதாகும். இது யாத்திராகமம் 20:1-17 இல் காணப்படுகிறது.[5] கிறிஸ்தவ உட்பிரிவினர் இக்கட்டளைகாளை 10 குழுக்களாக தொகுக்கும் முறை வெவ்வேறானது. பின்வரும் வசனங்கள் குழுக்களாக பிரிக்காமல் தரப்பட்டுள்ளது. இவை ஜேம்ஸ் மன்னன் பதிப்பு விவிலியத்திலிருந்து பெறப்பட்டவையாகும்.

தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளாவன;
(1) உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. (2) என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். (3) மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; (4) நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். (5) என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன். (6) உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். (7) ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; (8) ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; (9) ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். (10) கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். (11) உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. (12) கொலை செய்யாதிருப்பாயாக. (13) விபசாரம் செய்யாதிருப்பாயாக. (14) களவு செய்யாதிருப்பாயாக. (15) பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. (16) பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

[தொகு] வகைப்படுத்தல்கள்

மேற்காணப்படும் யாத்திராகமம் 20 இன் விவிலியப் பகுதியானது, பத்துக்கு மேற்பட்ட தனி வசனங்களை கொண்டுள்ளது. ஆனால் விவிலியத்தில் பத்துக் கட்டளைகள் என்ற பதம் யாத்திராகாமம் 34:28, உபாகமம் 4:13, உபாகமம் 10:4 இல் பாவிக்கப்பட்டுள்ளது.[6] எனவே இவ் 16 வசனங்களும் 10 கட்டளைகளாக குழுப்படுத்தப்படுகின்றது. இக் குழுப்படுத்தல் சமய மற்றும் சமய குழுக்கலிடையே வேறுபடுகிறது.

கத்தோலிக்கர் மற்றும் லூதரன் திருச்சபைகள் முதல் ஆறு வசனங்களை அன்னிய தெய்வங்களை வணங்குவதற்கு எதிரான கட்டளையாக கொள்கின்றனர். லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய சீர்த்திருத்த திருச்சபைகள் இவ்வாறு வசனங்களை இரண்டு கட்டளைகளாக பிரித்து நோக்குகின்றன. (முதலாவது "ஏக கடவுள்" ,இரண்டாவது "சிலைவழிபாட்டுக்கு எதிரானது") கத்தோலிக்க மற்றும் லூதரன் திருச்சபைகள் கடைசி வசனங்களில் கூறப்பட்டுள்ள விரும்புதலுக்கு எதிரான கட்டளைகளை "மனைவி" மற்றும் உடைமை என இரண்டாக பிரிக்கின்றனர்.

[தொகு] கத்தோலிகரின் பத்துக் கட்டளைகள்

  1. ஒரே கடவுளை விசுவாசிப்பாயாக
  2. கடவுள் திருப்பெயரை வீணாக உச்சரிக்காதிருப்பாயாக
  3. கடவுளின் திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக
  4. பெற்றோரை கனம்பன்னுவாயாக
  5. கொலை செய்யாதிருப்பாயாக
  6. மோக பாவம் செய்யாதே
  7. களவு செய்யாதிருப்பாயாக
  8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக
  9. பிறர் மனைவியை விரும்பாதிருபாயாக
  10. பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயாக

[தொகு] லூதரன் சபைகளின் பத்துக் கட்டளைகள்

லூதரன் திருச்சபைகளின் பத்துக்கட்டளை வகைப்படுத்தலும் கத்தோலிக்க திருச்சபையின் வகைப்படுத்தலை ஒத்ததாகும்.

[தொகு] சீர்த்திருத்த சபைகளின் பத்துக் கட்டளைகள்

சீர்த்திருத்த திருச்சபைகள் பல காணப்படுகின்ற காரணத்தினால் அவை எல்லாவற்றினதும் கருத்துக்களை ஒன்றாக தொகுப்பது கடினமான விடயமாகும். பின்வருவன லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய திருச்சபைகளின் பொதுவான நோக்காகும்.

முகவுரை: 20:1-2 [7]
இது கட்டளைகளை ஏன் இஸ்ரவேலர் கைக்கொள்ள வேண்டும் என்பதை சுட்டி நிற்கிறது.

  1. வசனம் 20:3 [8]
    இங்கு அன்னிய கடவுள்களை வணங்குதலை தடுக்கும் கட்டளையாகும். இங்கு வணங்குதல் மட்டுமல்லாது அன்னிய தெய்வங்களை மரியாதை செய்தல் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
  2. வசனங்கள் 20:4-6 [9]
    இவ்வசனங்கள் இரண்டும் சேர்த்து இரண்டாவது கட்டளையாக கொள்ளப்படிகிறது. இங்கு கடவுளை சிலகளூடாக வழிபடுவது தடைச்செய்யப்படுகிறது. இங்கு சிலைகளோ அல்லது வேறு உயிரினங்களையோ கடவுளாக கருதுவது பாவச்செயலாக சுட்டப்படுகிறது.
  3. வசனம் 20:7 [10]
    இதில் கடவுளின் பெயர், அவரது செயல்கள், வசனங்கள் போன்றவற்றுகு புனித தன்மை கொடுக்கப்பட்டு அவை வீணாக உச்சரிக்கமல் இருப்பதை உறுதி செய்கிறது. இது சத்தியம் செய்வதற்கு எதிரான கட்டளையாக சிலரால் கொள்ளப்படுகிறது.
  4. வசனங்கள் 20:8-11 [11]
    இம்மூன்று வசனங்களும் சேர்த்து கடவுளுக்கு கடவுளுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற நான்காவது கட்டளையாக கொள்ளப்படுகின்றது. இது வாரத்தின் இறுதிநாளை கடவுளுக்காக ஒடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
  5. வசனங்கள் 20:12 [12]
    இக்கட்டளை ஒன்றே நேரடியாக செய்யவேண்டியதை சுட்டுகிறது. இது பெற்றோரை மதித்து அவகளை கணம்பண்ணுவதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
  6. வசனங்கள் 20:13 [13]
    இது உயிரின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. உயிர் ஒன்றை கொலை செய்ய அல்லது அதை தடை செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் தடுக்கிறது.
  7. வசனங்கள் 20:14 [14]
    இதன் மூலமாக மற்றைவர்களை மீதான காம எண்ணங்களும் நடவடிகைகளும் தடைசெய்யப்படுகிறது.
  8. வசனங்கள் 20:15 [15]
    திருடலுக்கு எதிரான கட்டளையாகும். இதன் மூலம் சட்டப்படி நம்முடையவைகள் தவிர்ந்த ஏனையவற்றை சட்டவிரோதமான முறையில் சேர்ப்பது தடைசெய்யப்படுகிறது.
  9. வசனங்கள் 20:16 [16]
    இது மக்களிடையே உண்மைபேசப்படுவதன் முக்கியத்துவதை கூறுகின்றது. முக்கியமாக ஏதாவது ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக இருக்கும் போது உண்மையை பேசவேண்டியதன் முக்கியத்துவதை சுட்டுகிறது.
  10. வசனங்கள் 20:17 [17]
    இக்கட்டளை தனதல்லாத வேறு நபர் ஒருவரின் உடைமைகளையோ அல்லது அவரது துணைவரையோ( மனைவி, கணவன்) பெற்றுக்கொள்ளும் படி விரும்புவதை இக்கட்டளை தடைசெய்கிறது.

[தொகு] உசாத்துணை

  1. யாத்திராகமம் 31:18
  2. யாத்திராகமம் 34:28
  3. விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு
  4. யாத்திராகமம் 19:10-16
  5. யாத்திராகமம் 20:1-17
  6. யாத்திராகமம் 34:28, உபாகமம் 4:13, உபாகமம் 10:4
  7. யாத்திராகமம் 20:1-2
  8. யாத்திராகமம் 20:3
  9. யாத்திராகமம் 20:4-6
  10. யாத்திராகமம் 20:7
  11. யாத்திராகமம் 20:8-11
  12. யாத்திராகமம் 20:12
  13. யாத்திராகமம் 20:13
  14. யாத்திராகமம் 20:14
  15. யாத்திராகமம் 20:15
  16. யாத்திராகமம் 20:16
  17. யாத்திராகமம் 20:17

[தொகு] திரைப்படம்

இந்தப் பத்து கட்டளைகளை பற்றிய பின்னணியைக் கொண்டு ஹாலி வூட்டில் திரைப்படங்களும் தயாரித்து வெடியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

[தொகு] வெளியிணைப்புகள்

Wikimedia Commons logo
விக்கிமீடியா காமன்ஸ் -ல் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu