See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
நிலப்படம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

நிலப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

புவியின் நிலப்படம்.
புவியின் நிலப்படம்.

நிலப்படம் என்பது புவி அல்லது வேறு கோள்களின் மேற்பரப்பில் உள்ள புவியியல், நிலவியல், புவிஅரசியல் போன்றவை தொடர்புள்ள அம்சங்களை, அளவுவிகிதத்துக்கு (scale) அமையப் பதிலிட்டுக் காட்டுவதற்கான ஒரு வரைபடம் ஆகும். பொதுவாக இது ஒரு மட்டமான மேற்பரப்பில், வரையப்படுகின்றது. இதனைக் குறிக்க, தேசப்படம், வரைபடம் போன்ற சொற்களும் வழக்கில் உள்ளன. உலகக் கோள மாதிரிகளில், நிலப்படம் ஒரு கோள மேற்பரப்பில் வரையப்படுகின்றது. நிலப்படவரைவியல் (Cartography) என்பது நிலப்படங்களை வரைவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். முக்கியமான நிலப்படவகைகளிலே தரைத்தோற்ற வரைபடங்கள் அடங்குகின்றன. இவை புவியின் நில மேற்பரப்பு, கரையோர மற்றும் கடல்சார்ந்த பகுதிகள், கடல் ஆழம் மற்றும் நீர்ச் சுற்றோட்டங்களைக் காட்டும் படங்கள், விமானப் போக்குவரத்து தொடர்பான படங்கள், காலநிலை விபரங்களைக் காட்டும் படங்கள் போன்றவையாக அமைகின்றன.

[தொகு] புவியியல் நிலப்படங்கள்

நிலப்படம் வரைதல், கற்காலத்திலேயே இருந்திருப்பதாகத் தெரிகிறது. இது எழுத்து மொழியிலும் பார்க்கப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாகவும் கருதப்படுகின்றது. இன்றுவரை நிலைத்திருக்கின்ற மிகப் பழைய நிலப்படம் ஒன்று, அனதோலியாவில் (தற்காலத் துருக்கி) காட்டல் ஹுயுக் (Catal Huyuk) என்னும் இடத்தில் சுவரில் வரையப் பட்டுள்ளது. இது கி.மு 6200 ஆம் ஆண்டுக்கும் முந்தியதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்திலுள்ள தேவாலயமொன்றில் காணப்படும் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலப்படம். ஜெரூசலத்தை மையப்படுத்தி வரையப்பட்டுள்ளது.
இங்கிலாந்திலுள்ள தேவாலயமொன்றில் காணப்படும் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலப்படம். ஜெரூசலத்தை மையப்படுத்தி வரையப்பட்டுள்ளது.

நிலப்படங்கள், அறிவியல் சார்ந்த உலகநோக்குக்கு அமைய உருவாக்கப்படுவதாக இன்று கருதப்பட்டு வந்தாலும், முற்கால நிலப்படங்கள் சில சமயங்களில் இவ்வுலகம் கடந்த அம்சங்களை உள்ளடக்கியனவாகவும் காணப்பட்டன. மேற்கத்தைய மரபுகளுக்கு வெளியே காணப்பட்ட, முன்நவீன நிலப்படவரைபு மரபுகள், புவியியலை அறிவியல்சாராத அண்ட அமைப்பியலுடன் கலந்து, படத்தைப் பார்ப்பவருக்கும் அண்டத்துக்கும் உள்ள தொடர்பையும் காட்ட முனைந்தன. எடுத்துக்காட்டாக, மத்தியகாலத்தைச் சேர்ந்த, டி-ஓ நிலப்படங்கள் என அழைக்கப்பட்ட ஒருவகை நிலப்படங்கள், ஜெரூசலத்தை உலகின் மையமாகக் காட்டியதுடன், சில சமயங்களில், புவியைக் கிறிஸ்துவின் உடலுடன் தொடர்புபடுத்தியும் காட்டின. இதற்கு முரணாக, மத்தியதரைக் கடல் பகுதியைச் சேர்ந்த கடற்பயண வழிகாட்டிப் படங்கள் குறிப்பிடத்தக்க துல்லியம் கொண்டவையாக விளங்கின.

புவியியல் நிலப்படங்கள் பண்பியல் (abstract) அடிப்படையில் உலகைக் குறிப்பனவாகும். இந்தப் பண்பியல் தன்மையே அவற்றைப் பயன் உடையதாக்குகின்றது. சாலைகளைக் காட்டும் நிலப்படங்களே இக்காலத்தில் மிக அதிகமாகப் பயன்படுகின்ற நிலப்படங்கள் எனலாம். இவ்வகை நிலப்படங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் கடற் பயணங்களுக்கான வரைபடங்கள், தொடர்வண்டிப் பாதை வலையமைப்பு நிலப்படங்கள், போன்ற வரைபடங்களுடன் சேர்ந்து வழிகாட்டும் நிலப்படங்கள் என்ற துணைப் பிரிவுள் அடங்குகின்றன. தற்காலத்தில் பல நாடுகளில் வரையப்படும் நிலப்படங்களில், உள்ளூராட்சி அமைப்புக்கள், வரிக் கணிப்பீட்டு அமைப்புக்கள், அவசரகாலச் சேவைகள் வழங்குனர்கள், முதலியனவற்றினால் ஏற்பாடு செய்யப்படும் நில அளவைகள் மூலம் உருவாக்கப் படும் படங்களே அதிகம் எனலாம். வேறு பல நாடுகளில் இதற்கென உருவாக்கப்படுகின்ற அரசாங்க நிறுவனங்களே நிலப்படம் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றன.

[தொகு] நிலப்படங்களின் திசை

நிலப்பட வரைபில், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளின்படி, வடக்குத் திசை மேல் நோக்கி இருக்கும் படியாகவே நிலப்படங்கள் வரையப்படுகின்றன. இருந்தாலும்:

  • ஆர்க்டிக், அண்டார்க்டிக் போன்ற துருவப் பகுதிகளின் நிலப்படங்களை வரையும் போது துருவம் நடுவில் இருக்கும்படி வரைவதே மரபாகும். இத்தகைய சந்தர்ப்பங்களில் வடக்கு மேல்நோக்கி இருக்கும்படி வரைவது பயன்பாட்டுக்கு உகந்ததாக இருக்காது.
  • வானூர்திகளின் பயணப் பாதைகளைத் திட்டமிடுவதற்காகத் தயாரிக்கப்படும் நிலப்படங்களும், குறிப்பிட்ட தொடக்க இடங்களை மையப்படுத்தி வரையப்படுவது உண்டு.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -