நம்பி நெடுஞ்செழியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நம்பி நெடுஞ்செழியன் கி.பி. 170 முதல் 180 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பேரெயின் முறுவலார் இம்மன்னனைப் பற்றி
“ |
"தொடிஉடைய தோள் மணந்தனன் கடி காலில் பூச் சூடினன் தண் கமழும் சாந்து நீவினன் செற்றோரை வழி தடித்தனன் நட்டோரை உயர்பு கூறினன் வலியர் என வழி மொழிபவன் மெலியர் என மீக்கூறலன் பிறரைத் தான் இரப்பு அறியலன் இரந்தோர்க்கு மறுப்பு அறியலன் வேந்துடை அவையத்து ஒங்குபுகழ் தோற்றினன் வருபடை எதிர் தாங்கினன் பெயர் படை புறங்கண்டனன் பாண் உவப்ப பசி தீர்த்தனன் செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் இடுக ஒன்றோ?சுடுக ஒன்றோ படுவழிப் படுக இப்புகழ் வெய்யோன் தலையே! |
” |
—(புறம் - 239) |
கூறுகின்றார் அதில் "செய்தக்க எல்லாப் செய்தவன். இறந்துவிட்டான்! புகழ் கொண்டான். இவனை இடுகாட்டில் புதைத்தால் என்ன? சுட்டால் என்ன?' என இப்புலவர் வருந்திக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.