துறைமுகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
துறைமுகம் என்பது கப்பல்கள் மற்றும் படகுகள் வந்து தங்கி செல்வதற்குரிய இடம் ஆகும். இங்கே கப்பல்களுக்கு வேண்டிய பொருட்கள், தொழிலாளருக்கு இருப்பிடம், போன்றன வழங்கப்படும். துறைமுகங்களை இயற்கைத் துறைமுகங்கள், செயற்கைத் துறைமுகங்கள் என இருவகைப் படுத்தலாம். இயற்கைத் துறைமுகங்கள் இராணுவ, பொருளாதாரக் காரணங்களால் முக்கியத்துவமுடையவையாக இருந்து வருகின்றன.