விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் 17
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 1942 - மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாசி ஜெர்மனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1958 - சூரிய சக்தியில் இயங்கக்கூடிய முதலாவது செய்மதி, வங்கார்ட் 1 (படம்), விண்ணுக்கு ஏவப்பட்டது. பூமியைச் சுற்றிவரும் மிகப் பழமையான செய்மதி இதுவாகும்.
- 1996 - இலங்கை அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.