மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பானது ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைப்பாகும். இது மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையானது 15 மார்ச் 2006 இல் தீர்மானிக்கப்பட்டதன் படி புதியதோர் உருவாக்கப்பட்டது. இதில் 191 பேர் கொண்ட பொதுச்சபையில் 170 பேரின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அமெரிக்கா, மார்ஷல் தீவுகள், பலவு மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இவ்வமைப்பானது மனித உரிமைமீறல்களைகளில் இருந்து பாதுகாப்பை வழங்குவதற்கு அதிகாரங்கள் போதாதிருப்பதாக் கூறி எதிர்த்து வாக்களித்தன. பெலாரஸ், ஈரான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இவ்வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. மேலும் 7 நாடுகள் இக்கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை.
[தொகு] அமைப்பின் உட்கட்டமைப்பு
47 இருக்கைகள் கொண்ட மனித உரிமைகள் அமைப்பானது முன்னைய 53 இருக்கைகள் கொண்ட மனித உரிமைகள் கமிஷனை மாற்றீடு செய்துள்ளது. இந்த 47 இருக்கைகளும் பிரதேச ரீதியாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. 13 - ஆபிரிக்காவிற்கும். , 13 - ஆசியாவிற்கும், 6 - கிழக்கு ஐரோப்பிய நாடுகளிற்கும், 8 - இலத்தீன் அமெரிக்காவிற்கும், 7 - மேற்கு ஐரோப்பாவிற்கு ஏனைய நாடுகளிற்கும் பகிர்ந்தளிக்கபடுகின்றது.
இந்த அமைப்பானது 16 ஜூன் 2006 இல் வேலைகளை ஆரம்பித்துள்ளது.