Web Analytics

See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
நொதியம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

நொதியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

டிரையோஸ்-பாஸ்பேட்-ஐசொமெரேசு (Triosephosphate isomerase) என்னும் நொதியம். இது உடலில் உள்ள சக்கரைப் பொருளை ஆற்றலாய் மாற்ற்றுவதில் திறம் மிக்கது
டிரையோஸ்-பாஸ்பேட்-ஐசொமெரேசு (Triosephosphate isomerase) என்னும் நொதியம். இது உடலில் உள்ள சக்கரைப் பொருளை ஆற்றலாய் மாற்ற்றுவதில் திறம் மிக்கது

நொதி அல்லது நொதியம் (enzyme) என்னும் புரதப் பொருளானது உயிரினங்களின் உடலில் நிகழும் வேதியியல் வினைகளை விரைவாக செய்யத்தூண்டும் ஒரு வினையூக்கி ஆகும். ஏறத்தாழ உடலில் உள்ள எல்லா செல்களின் இயக்கத்திற்கு தேவையான எல்லாவற்றுக்கும் இந் நொதியங்கள் தேவைப்படுகின்றன. இவ் வினையூக்கியாகிய நொதி இல்லாவிடில், சில வேதியியல் வினைகள் ஆயிரக்கணக்கான மடங்கு அல்லது மில்லியன் கணக்கான மடங்கு மிக மெதுவாகவே நடக்கும். இப்படி மெதுவாக நடக்க நேரிட்டால் ஓர் உயிர் வாழ இயலாது. எனவே நொதிகள் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.

உயிரினத்தின் உடலில் உள்ள எல்லா செல்களும் தேவையான நொதிகளை ஆக்குகின்றன என்றாலும் நொதி ஓர் உயிர்ப்பொருள் அல்ல. நொதி, பிற சேர்மங்களுடன் சேர்ந்து நுட்பச் செறிவு மிகுந்த வேதியியல் பொருள் அமைப்புகளை உருவாக்கி அதன் வழி வேதி வினைகள் நிகழ வழி வகுக்கின்றது. ஆனால் நொதி தன் இயல்பு மாறாமல் இருந்து இறுதியில் விடுபடுகின்றது. ஒரு நொதி ஒரு மணித்துளியில் (நிமிடத்தில்) தன் வினையை மில்லியன்கணக்கான தடவை செய்ய வல்லது. மாந்த உடலில் 1000 க்கும் மேலான வெவ்வேறு வகை நொதிகள் உருவாகி செயல்படுகின்றன. மிக விரைவாக வினை ஆற்றுவது மட்டுமின்றி, குறிப்பிட்ட வினைகளை மட்டுமே மிக மிகத் துல்லியமாய், தக்க சூழலில் மட்டுமே, பூட்டும் அதற்கான திறவுகோலும் போல் மிகுதேர்ச்சியுடன் இயக்குகின்றது. இத் துல்லியத் தேர்ச்சியானது நொதிகளின் சிறப்பியல்புகளில் ஒன்று. இன்று அறிந்துள்ளதில் நொதிகள் சுமார் 4000 உயிர்-வேதியியல் வினைகளுக்கு அடிப்படையாக உள்ளன.

செடிகொடிகளில் ஒளிச்சேர்க்கை நிகழ்வது முதல் மாந்தர்களின் உடலில் உணவு செரிப்பது, மூளை இயங்குவது, இதயம் துடிப்பது, மூச்சு விடுவது ஆகிய அனைத்துமே நொதிகளின் இன்றியமையாத துணையால் நிகழ்வன.

[தொகு] நொதி என்னும் சொல்

இட்லி தோசை செய்வதற்காக நொதிக்கவைக்கப்பட்ட உளுந்து மற்றும் அரிசி மாவு பொதுமி பொங்கி நிற்கும் காட்சி
இட்லி தோசை செய்வதற்காக நொதிக்கவைக்கப்பட்ட உளுந்து மற்றும் அரிசி மாவு பொதுமி பொங்கி நிற்கும் காட்சி

தமிழில் நொதி என்னும் சொல் நொதித்தல் என்னும் வினையடிப் பிறந்தது. புளித்த மாவு பொங்கி வருதலுக்கு நொதித்தல் என்று பெயர். கள், சாராயம் முதலியன உருவாவதும் நொதித்தலால் நிகழ்வது. நொதுநொதுத்தல் என்றால் இளகிக் குழைந்து போகுதல். இவை ஈஸ்ட்டு போன்ற நுண்ணுயிர்களில் உள்ள பொருளால் திரண்டு வருவதால் அப்பொருட்களுக்கு நொதி அல்லது நொதியம் என்று பெயர்.

[தொகு] வரலாறு

எடுவர்டு பூக்னர் (Eduard Buchner)  நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச் செய்யும் முறையக் கண்டதற்காக, 1907 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
எடுவர்டு பூக்னர் (Eduard Buchner) நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச் செய்யும் முறையக் கண்டதற்காக, 1907 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

உண்ணும் இறைச்சி போன்ற உணவானது வயிற்றில் ஊறும் சில நீர்மப் பொருட்களால் செரிக்கப்படுகின்றது [1] எனவும், தாவரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட சில பொருட்களும் வாயில் ஊறும் உமிழ்நீரும் மாவுப் பொருட்களை சர்க்கரை போன்ற இனியங்களாக மாற்றுகின்றன எனவும் கி.பி. 1700களின் கடைசியிலும் 1800களின் முன் பகுதியிலும் அறிந்திருந்தனர். ஆனால் எம்முறைகளால் இவ்வாறு ஆகின்றது என அறிந்திருக்கவில்லை. [2]

19 ஆம் நூற்றாண்டில் சர்க்கரைக் கரைசலை ஈஸ்ட்டு என்னும் நுண்ணுயிரியை கொண்டு நொதிக்கவைத்து ஆல்க்கஹால் செய்யும் பொழுது லூயி பாஸ்ச்சர் அவர்கள் பின்வரும் முடிவுக்கு வந்தார்: ஆல்க்கஹால் நொதித்ததற்குக் காரணம் ஈஸ்ட்டு செல்களில் உயிர்ப்புடன் இருந்த தன்மையும் அமைப்புதான் காரணம். இறந்து கெட்டுப்போன ஈஸ்ட்டின் செல்களால் அல்ல. ("alcoholic fermentation is an act correlated with the life and organization of the yeast cells, not with the death or putrefaction of the cells.")[3] இதனை லூயி பாஸ்ச்சர் "ferments" (= நொதிக்கக் காரணையாய் இருந்தவை) என்றார்.

1878 ல் ஜெர்மன் உடலியங்கியல் அறிஞர் வில்ஹெல்ம் கூனே (Wilhelm Kühne) (1837–1900) என்பவர் இன்று ஆங்கிலத்தில் வழங்கும் என்சைம் (enzyme) என்னும் சொல்லை ஆக்கினார். இச்சொல் மேற்கத்திய ரொட்டி (bread) ஆக்கப் பயன்படும் முறையைச் சுட்டும் கிரேக்கச் சொல் Greek ενζυμον "in leaven" என்பதில் இருந்து பெறப்பட்டது. பிற்காலத்தில் என்சைம் enzyme என்னும் இப்பெயர் பெப்சின் (pepsin) பொன்ற உயிரற்ற பொருட்களுக்குப் பயன்பட்டது.

1897ல் ஜெர்மனியைச் சேர்ந்த எடுவர்டு பூக்னர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய ஆய்வுகளின் பயனாய் சக்கரைக் கரைசலை ஈஸ்ட்டு போன்ற நுண்ணுயிரிகள் இல்லாமலே எத்தனால் என்னும் ஆல்க்கஹலாய் நொதிக்கச் செய்யும் முறையைக் கண்டறிந்தார்[4]. இதற்குப் பயன்பட்ட பொருளை (நொதியை) சைமேசு. நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச் செய்யும் முறையக் கண்டதற்காக இவர் 1907 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார் [5]. பூக்னர் அவர்களின் முறையைப் பின்பற்றி நொதிகளுக்கு -ஏசு (-ase) என்னும் பின்னொட்டு சேர்ப்பது இன்று மரபு. எடுத்துக்காட்டாக, கொழுப்புகளைப் பிரித்திளக்கும் லைப்பேசு, பாலில் உள்ள லாக்டோசைப் பிரிக்க உதவும் லாக்ட்டேசு முதலியவற்றைச் சொல்லலாம்.

[தொகு] மேற்கோள்கள்

  1. de Réaumur, RAF (1752). Observations sur la digestion des oiseaux. Histoire de l'academie royale des sciences 1752: 266, 461.
  2. Williams, H. S. (1904) A History of Science: in Five Volumes. Volume IV: Modern Development of the Chemical and Biological Sciences Harper and Brothers (New York)
  3. Dubos J. (1951). Louis Pasteur: Free Lance of Science, Gollancz. Quoted in Manchester K. L. (1995) Louis Pasteur (1822–1895)--chance and the prepared mind.. Trends Biotechnol 13 (12): 511-515. PMID 8595136.
  4. நோபல் பரிசு நிறுவனத்தில் நோபல் பரிசாளர் எடுவர்டு பூக்னர் வ்ரலாறு (http://nobelprize.org)
  5. நோபல் நிறுவனத்தில் உள்ள எடுவர்டு பூக்னர்ரின் 1907 ஆம் ஆண்டின் நோபல் பரிசுரை (http://nobelprize.org)

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu