செரித்தல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செரித்தல் என்பது உடலானது உண்ட உணவைப் பிசைந்தும், இளக்கியும் உயிர்வேதியியல் முறைகளில் பிரித்தும் பகுத்தும் தனக்குத் தேவையான வாறு அதில் இருந்து ஊட்டச் சத்துக்களை உடலுள் ஈர்த்துக் கொள்வதாகும். ஈர்த்தபின் வேண்டாத சக்கையை வெளித்தள்ளுவதும் உடலின் வேலை.
செரித்தல் என்பதின் அடிப்படையான வினையை விளக்குமாறு தமிழில் அதற்கு அறுத்தல் என்னும் சிறப்பான கலைச்சொல் உண்டு. உணவைப் பிரிப்பதற்கு அறுத்தல் என்று பெயர். திருவள்ளுவர்,
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். (குறள் 942)
என்று கூறியதில் உள்ள “அற்றது போற்றி உணின்” என்னும் தொடரில் உள்ள அற்றது என்னும் சொல் உண்ட உணவை முழுவதுமாக செரித்தல் என்பதைக் குறிக்கும்.
பொருளடக்கம் |
[தொகு] உணவு செரித்தல் எவ்வாறு நிகழ்கின்றது?
[தொகு] வாய், உணவுக்குழாய்
மாந்தர்கள் உணவை வாயில் இட்டவுடன் செரித்தல் அல்லது அறுத்தல் தொழில் தொடங்குகின்றது. முதலில் உணவானது பற்களால் மெல்லப்பட்டு, வாயில் ஊறும் உமிழ்நீரால் ஈரப்படுத்தியும், உமிழ்நீரில் உள்ள அமிலேசு போன்ற நொதியால் மாவுப் பொருட்கள் சிலவற்றை பிரிப்பது தொடங்கப்படுகின்றது (அறுத்தல் நிகழ்வு தொடங்குகின்றது). பல்லால் மெல்லும்பொழுது மேலும் உமிழ்நீர் சுரக்கின்றது. ஈரப்படுத்திய உணவு சிறு கவளங்களாக தொண்டை வழியாக இறங்கி உணவுக் குழாயை அடைகின்றது. இந்த உனவுக் குழாய் சுமார் 20 செ.மீ நீளமுள்ளது. சுருங்கியும் விரிந்தும் ஓர் அலை போன்ற அசைவுகளால் (சுற்றிழுப்பசைவு) உணவானது உணவுக்குழாயில் நகர்ந்து இறைப்பையை அடைகின்றது. (வளரும்)