சியாட்டில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சியாட்டில் நகரம் | |||
|
|||
சிறப்புப்பெயர்: பச்சைமணி நகரம் | |||
கிங் மாவட்டம் மற்றும் வாஷிங்டன் மாநிலத்திலும் இருந்த இடம் | |||
அமைவு: | |||
---|---|---|---|
நாடு | ஐக்கிய அமெரிக்கா | ||
மாநிலம் | வாஷிங்டன் | ||
மாவட்டம் | கிங் | ||
குடியேற | டிசம்பர் 2 1869 | ||
அரசு | |||
- வகை | மாநகராட்சி தலைவர்–சபை | ||
- மாநகராட்சி தலைவர் | கிரேக் நிக்கெல்ஸ் (D) | ||
பரப்பளவு | |||
- நகரம் | 142.5 சதுர மைல் (369.2 km²) | ||
- Land | 217.2 கிமீ² (83.87 சதுர மைல்) | ||
- நீர் | 152.0 கிமீ² (58.67 sq mi) | ||
- மாநகரம் | 21,202 கிமீ² (8,186 சதுர மைல்) | ||
ஏற்றம் | 0–158 மீ (0–520 அடி) | ||
மக்கள் தொகை (ஜூலை 1 2006)[1][2] | |||
- நகரம் | 582,174 | ||
- அடர்த்தி | 2,665/கிமீ² (6,901/சதுர மைல்) | ||
- மாநகரம் | 3,263,497 | ||
நேர வலயம் | PST (ஒ.ச.நே.-8) | ||
- கோடைகாலம் (ப.சே.நே.) |
PDT (ஒ.ச.நே.-7) | ||
தொலைபேசி குறியீடு(கள்) | 206 | ||
FIPS code | 53-63000வார்ப்புரு:GR | ||
GNIS feature ID | 1512650வார்ப்புரு:GR | ||
விமான நிலையம் | சியாட்டில்-டகோமா பன்னாட்டு விமான நிலையம்- SEA | ||
இணையத்தளம்: www.seattle.gov |
சியாட்டில் அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தின் உள்ள ஒரு நகரம் ஆகும். கரையோரத் துறைமுக நகரமான இந்நகரம், ஐக்கிய அமெரிக்காவின் பசிபிக் வடமேற்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய நகரமும் ஆகும். கிங் கவுண்டியின் தலைமை இடமான இது, கனடா-ஐக்கிய அமெரிக்க எல்லைக்கு தெற்கே சுமார் 96 மைல்கள் (154 கிமீ) தொலைவில் அமைந்துள்ளது.
சியாட்டில் பகுதியில் சுமார் 4,000 ஆண்டுகளாகவே மனிதக் குடியேற்றம் இருந்துள்ளது. எனினும், ஐரோப்பியரின் குடியேற்றம் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே தொடங்குகிறது. முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் 1851 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி இவ்விடத்தை அடைந்தனர். தொடக்கத்தில் ஐரோப்பியரால் நியூ யார்க்-ஆல்க்கி அன்றும் டுவாம்ப் என்றும் இவ்விடம் அழைக்கப்பட்டது. 1853 ஆம் ஆண்டில் இப் பகுதியின் முக்கிய குடியேற்றத்துக்கு, உள்ளூர்ப் பழங்குடித் தலைவனின் பெயரைத் தழுவி சியாட்டில் எனப் பெயரிடவேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.