சாகித்ய அகாதமி விருது
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சாகித்ய அகாதமி விருது (Sahitya Akademi), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 40,000[ரூபாய்|ரூபாயு]]ம், ஒரு விருதும் வழங்கப்படுகிறது. சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
தமிழ் மொழியில் சாகித்ய அகாதெமி விருது என்பது பெரும்பாலும் சர்ச்சைக்கு உரிய விருதாகவே உள்ளது. தமிழுக்கான விருது பெறுபவர்கள், அவ்விருதினை பெறுவதற்கு தகுதியில்லாதவர்கள் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.
[தொகு] சாகித்ய அகாதெமி
சாகித்ய அகாதெமி இந்திய அரசினால், மார்ச் 12, 1954 இல் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்ட அமைப்பு, சாகித்ய அகாதெமி. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது சாகித்ய அகாதெமி.
இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை செய்வது சாகித்ய அகாதெமி.
[தொகு] விருது தேர்ந்தெடுக்கப்படும் முறை
இது, நீண்ட, ஒராண்டு கால விவாதம் மற்றும் தேர்வுகளைக் கொண்டது. இந்த விருது இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும் அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஒர் ஊடகமாகத் திகழ்கிறது. அதுமட்டுமன்றி தற்கால மாறுதல்களையும், புதிய நிகழ்வுகளையும் ஏற்றுக்கொண்டு இந்திய இலக்கியங்களை விரிவுபடுத்துவது இதன் நோக்கமாகும்.
முதற்கட்டமாக தகுதியான புத்தகங்கள் அகாதமித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரிரண்டு வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்டு, 10 மொழி வல்லுனர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி வல்லுனரும் இரண்டு புத்தகங்களை விருதுக்கு பரிந்துரைப்பார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மூன்று நீதிபதிகளின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. அதிக வாக்குகளை அல்லது அனைவராலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு புத்தகமே விருதுக்கு தெரிவாகி, அகாதமி செயற்குழுவின் அங்கீகாரம் மற்றும் அறிவித்தலுக்கு அனுப்பப்படுகிறது.
Obviously, the President can exercise latitude and take liberties in the appointment and selection. The regional languages Akademies also follow a more or less similar system.
[தொகு] தமிழ் மொழிக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்கள்
ஆண்டு - படைப்பு (தன்மை) - படைப்பின் எழுத்தாளர்
- 1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை
- 1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி
- 1957 - (விருது வழங்கப்பட வில்லை)
- 1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி. ராஜகோபாலச்சாரி
- 1959 - (விருது வழங்கப்பட வில்லை)
- 1960 - (விருது வழங்கப்பட வில்லை)
- 1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசனார்
- 1962 - அக்கரைச்சீமை (பயண நூல்) - சோமு (மீ. ப. சோமசுந்தரம்)
- 1963 - வேங்கையின் மைந்தன் (நாவல்) - அகிலன் (பி. வி. அகிலாண்டம்)
- 1964 - (விருது வழங்கப்பட வில்லை)
- 1965 - ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) - பி. ஸ்ரீ ஆச்சார்யா
- 1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) - ம. பொ. சிவஞானம்
- 1967 - வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி. வா. ஜகன்னாதன்
- 1968 - வெள்ளைப் பறவை (கவிதை) - அ. ஸ்ரீனிவாச ராகவன்
- 1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன்
- 1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி
- 1971 - சமுதாய வீதி (நாவல்) - நா. பார்த்தசாரதி
- 1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - ஜெயகாந்தன்
- 1973 - வேருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன்
- 1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - K.D.திருநாவுக்கரசு
- 1975 - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - R.தண்டாயுதம்
- 1976 - (விருது வழங்கப்பட வில்லை)
- 1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி
- 1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) - வல்லிக்கண்ணன்
- 1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - தி. ஜானகிராமன்
- 1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்
- 1981 - புதிய உரைநடை (விமர்சனம்) - M.ராமலிங்கம்
- 1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) - பி. எஸ். ராமையா
- 1983 - பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) - தொ. மு. சிதம்பர ரகுநாதன்
- 1984 - ஒரு காவிரியைப் போல - திரிபுரசுந்தரி லக்குமி
- 1985 - கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) - அ. சா. ஞானசம்பந்தன்
- 1986 - இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) - க. நா. சுப்பிரமணியம்
- 1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன்
- 1988 - வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) - V.C.குழந்தைச்சாமி
- 1989 - சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) - லா. ச. ராமாம்ருதம்
- 1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு. சமுத்திரம்
- 1991 - கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) - கி. ராஜநாராயணன்
- 1992 - குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) - கோவி. மணிசேகரன்
- 1993 - காதுகள் (நாவல்) - M.V.வெங்கட்ராம்
- 1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)
- 1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன்
- 1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) - அசோகமித்ரன்
- 1997 - சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முகமது மீரான்
- 1998 - விசாரணைக் கமிஷன் (நாவல்) - ச. கந்தசாமி
- 1999 - ஆலாபனை (கவிதைகள்) - அப்துல் ரகுமான்
- 2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்) - தி. க. சிவசங்கரன்
- 2001 - சுதந்திர தாகம் (நாவல்) - சி. சு. செல்லப்பா
- 2002 - ஒரு கிராமத்து நாடி (கவிதைகள்) - சிற்பி. பாலசுப்பிரமணியம்
- 2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) - வைரமுத்து
- 2004 - வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) - ஈரோடு தமிழன்பன்
- 2005 - கல்மரம் (நாவல்) - G.திலகவதி
- 2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) - மு.மேத்தா