இந்திரா பார்த்தசாரதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்திரா பார்த்தசாரதி, சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர். இவர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது புகழ் பெற்ற எழுத்தாளர் தி. ஜானகிராமனின் மாணவராய் இருந்திருக்கிறார். தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 1960களில் பணியாற்றி வந்த இவர் முதலில் ஆனந்த விகடன் போன்ற கிழமை இதழ்களில் (வார இதழ்களில்) எழுதத்தொடங்கினார். பின்னர் நா. பார்த்தசாரதியின் தீபம் என்னும் மாதிகையிலும், கல்கி, கணையாழி ஆகிய இதழ்களிலும் எழுதிவந்தார். 1977ல் குருதிப்புனல் என்னும் புதினத்திற்கு இந்திய சாகித்ய அகாதெமி விருது பெற்றார். இவர் எழுதிய நந்தன் கதை, ராமானுஜர், ஔரங்கசீப் என்னும் நாடங்களும், யேசுவின் தோழர்கள் போன்ற படைப்புகள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.
[தொகு] வெளி இணைப்புகள்
இந்திரா பார்த்தசாரதியின் நேர்காணல் ஒலிக்கோப்பு வடிவிலும் எழுத்திலும்