See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
அடர்த்தி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

அடர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இயற்பியலில் ஒரு பொருளின் அடர்த்தி என்பது அப்பொருளானது ஒரு குறிப்பிட்ட பரும அளவில் (கன அளவில்) எவ்வளவு நிறை அல்லது திணிவு கொண்டு உள்ளது என்பதைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவில் உள்ள தங்கம் 19.32 கிராம் நிறை ஆகும். ஆனால் அதே ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவு கொண்ட வெள்ளி 10.49 கிராம்தான் உள்ளது. எனவே தங்கத்தின் "அடர்த்தி" வெள்ளியின் அடர்த்தியை விட கூடுதலானது. அடர்த்தி பின்வரும் சமன்பாட்டினால் கொடுக்கப்படும்.

\rho = \frac {m}{V}

SI அலகுகள்:

ρ = (ரோ அல்லது றோ) பொருளின் அடர்த்தி (அலகு: கி.கி/மீ-3, kg·m-3}
m = பொருளின் நிறை அல்லது திணிவு (அலகு: கி.கி, kg)
V = பொருளின் பரும அளவு (கன அளவு) (அலகு: மீ3)

நிறை அல்லது திணிவு, கிராம் அலகிலும், பரும அளவு (கன அளவு) கன செண்டி மீட்டர் (கன சதம மீட்டர்) அலகிலும் இருக்கும்போது அடர்த்தி, ஒரு செண்டி மீட்டருக்கு எவ்வளவு கிராம் என்பதாகும். அலகு : கிராம்/(கன செண்டி மீட்டர்) அல்லது கிராம்/(செண்டி மீட்டர்) 3 அலகில் இருக்கும். சுருக்கமாக கி/செ.மீ3 என எழுதுவது வழக்கம். SI அலகில் கி.கி/மீ3 என எழுதுவது வழக்கம்.

பல்வேறு பொருள்களின் அடர்த்திகள்:

பொருள் அடர்த்தி (கி.கி/மீ3)
இரிடியம் 22650
ஆஸ்மியம் 22610
பிளாட்டினம் 21450
தங்கம் 19300
டங்க்ஸ்டன் 19250
யுரேனியம் 19050
பாதரசம் 13580
பலேடியம் 12023
ஈயம் 11340
வெள்ளி 10490
செப்பு   8960
இரும்பு   7870
வெள்ளீயம்   7310
டைட்டேனியம்   4507
வைரம்   3500
அலுமீனியம்   2700
மக்னீசியம்   1740
கடல் நீர்   1025
நீர்   1000
ஈத்தைல் ஆல்கஹால்   790
பெட்ரோல்   730
Aerogel   3.0
எடுத்துக்காட்டு காற்று   1.2
வளியின் அடர்த்திρ vs. வெப்பநிலை °C
T in °C ρ கிகி/மீ³ இல்
- 10 1.341
- 5 1.316
0 1.293
+ 5 1.269
+ 10 1.247
+ 15 1.225
+ 20 1.204
+ 25 1.184
+ 30 1.164

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

  • தன்னீர்ப்பு


[தொகு] வெளி இணைப்புகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -