See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
மூலதனம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

மூலதனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பொருளியலில், முதல் அல்லது மூலதனம் என்பது ஒரு தொழிலைத் தொடங்க அல்லது ஒரு பொருளியல் ஆக்கத்தை உருவாக்கப் பயன் படும் அடிப்படையான நிலம், பொருள், இயந்திரம், பணம், முதலியவற்றைக் குறிக்கும். இது பொருளியல் ஆக்கத்திற்கு நீண்ட பயன்பாட்டுக்குரிய ஒரு உற்பத்திக் காரணியாகக் கருதப்படுகின்றது.

மெய் மூலதனத்தை, பணம், அல்லது நிதி மூலதனத்தின் மூலம் வாங்கிக்கொள்ள முடியும். மூலதனம் என்பது பொதுவாக ஒரு தொழில் முயற்சியைத் தொடங்குவதற்கும் அதனைப் பேணுவதற்குமான நிதி வளத்தைக் குறிக்கும்.

[தொகு] குறுகிய மற்றும் விரிந்த பயன்பாட்டு நோக்கில் மூலதனம்

செந்நெறிப் பொருளியலில், மூலதனம் என்பது மூன்று உற்பத்திக் காரணிகளில் ஒன்று. நிலம், உழைப்பு என்பன ஏனைய இரண்டுமாகும். பின்வரும் இயல்புகளைக் கொண்ட பொருட்கள் மூலதனங்கள் எனலாம்:

  • இது வேறு பொருட்களைத் உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படலாம்.
  • இது, இயற்கையாக இருக்கும் நிலம் போலன்றி, உற்பத்தி செய்யப்பட்டதாகும்.
  • மூலப்பொருட்களைப் போலவோ, இடைநிலைப் பொருட்களைப் போலவோ இல்லாமல், இது உடனடியாகப் பயன்படுத்தி முடிக்கப்படுவதில்லை.

வசதி கருதிய இந்த விளக்கங்கள் புதியசெந்நெறிப் பொருளியலிலும் சிறு மாற்றங்களுடன் பயன்படுத்தப்பட்டு வந்தது. மூலதனம் என்பது, உற்பத்திச் செயல்முறைகளில் பயன்படும், கருவிகள், கட்டிடங்கள், வாகனங்கள் போன்ற பொருட்களாகவே விளக்கப்பட்டுவந்தன.

சுமார் 1960 களிலிருந்து, பொருளியலாளர்கள் மூலதனத்தின் விரிந்த வடிவங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். எடுத்துக்காட்டாக, கல்வி, திறமை ஆகியவற்றிலிடப்படும் முதலீடு, அறிவு மூலதனம் (knowledge capital) அல்லது மனித மூலதனம் ஆகியவற்றின் உருவாக்கம் என்று கருதப்படலாம், அறிவுசார் சொத்துக்களில் (intellectual property) இடப்படும் முதலீடு, அறிவுசார் மூலதனத்தின் (intellectual capital) உருவாக்கம் என்றும் நோக்கப்படலாம்.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -