மணிரத்னம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மணிரத்னம் | |
---|---|
பிறப்பு | ஜூன் 02 1956 (வயது 52) மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
தொழில் | இயக்குனர், தயாரிப்பாளர், திரைகதையாளர் |
இணையத்தளம் | http://www.madrastalkies.com |
மணிரத்னம் (பிறப்பு - ஜூன் 2, 1956) இந்திய அளவில் அறியப்படும் தமிழ் இயக்குனர்களுள் ஒருவர். காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. ஏ. ஆர். ரகுமானை திரையிசைக்கு அறிமுகம் செய்தவரும் இவரே.
ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை பள்ளியில் படித்துவிட்டு, சென்னையில் உள்ள டி.வி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமல், தன் முதல் படமாகிய "பல்லவி அனுபல்லவி" படத்தினை இயக்கினார். சென்னையில், மனைவி சுஹாசினி மற்றும் மகன் நந்தனுடன் வாழ்கின்றார் மணிரத்னம்.
இவருடைய படங்கள் சுருக்கமான வசனங்களுக்கும் நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றவை.
[தொகு] மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்
- 1983 - பல்லவி அனுபல்லவி (கன்னடம்)
- 1984 - உணரு (மலையாளம்)
- 1985 - இதய கோவில்
- 1985 - பகல் நிலவு
- 1986 - மௌன ராகம்
- 1987 - நாயகன்
- 1988 - அக்னி நட்சத்திரம்
- 1989 - கீதாஞ்சலி (தெலுங்கு)
- 1990 - அஞ்சலி
- 1991 - தளபதி
- 1992 - ரோஜா
- 1993 - திருடா திருடா
- 1995 - பம்பாய்
- 1997 - இருவர்
- 1998 - தில் சே (ஹிந்தி) - தமிழில் உயிரே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.
- 2000 - அலைபாயுதே
- 2002 - கன்னத்தில் முத்தமிட்டால்
- 2004 - யுவா (ஹிந்தி)
- 2004 - ஆய்த எழுத்து - யுவாவும் ஆய்த எழுத்தும் வெவ்வேறு நடிகர்களை வைத்து ஒரே நேரத்தில் தமிழிலும் ஹிந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன.
- 2007 - குரு (ஹிந்தி) - இதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.
[தொகு] வெளி இணைப்புகள்
- மணிரத்னம் - சர்வதேச திரைப்பட தரவுதளம் (ஆங்கிலத்தில்)
- அனிதா நாயரின் நேர்காணல் (ஆங்கிலத்தில்)
- மணிரத்னம் விசிறிகள் குழுமம் (ஆங்கிலத்தில்)