பெர்ள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பேர்ழ் அல்லது பெர்ள் (Perl) ஒரு கணினி நிரலாக்க மொழி. இது ஒரு dynamic படிவ நிரலாக்க மொழி வகையைச் சார்ந்தது. இதன் முதல் பதிப்பு 1987 இம்மொழியின் ஆக்கர் லாரி வோல் (Larry Wall) அவர்களால் வெளியிடப்பட்டது. 1988 இல் இரண்டாவது பதிப்பும் 1989 இல் மூன்றாவது பதிப்பும் வெளியானது. இது ஒரு கட்டற்ற மென்பொருளாகும். குனு கட்டற்ற ஆவண உரிமத்தின் கீழும் வெளியிடப்படுகிறது.
இது சி, ஆக், செட், பேசிக் போன்ற பல நிரல் மொழிகளின் வசதிகளையும் தன்மைகளையும் உள்வாங்கி உருவாக்கப்பட்டது.[1] இருப்பினும் எழுத்துத்தொடர்களை(strings) எளிதில் கையாளும் வசதிகள் மற்றும் ஒத்த மொழிகளில் இருந்த சில கட்டுக்கள் இல்லாதிருத்தல் ஆகியவற்றால் இது பெரிதும் பயன்படுத்தப்படத் துவங்கியது.[2]
பின்னர், இதன் கட்டற்ற தன்மையும் எவர் வேண்டுமானாலும் பங்களிக்கலாம் என்ற உரிமமும்[3] அதற்கு வசதியான[4] பகுதிக்கூறு கட்டமைப்பும் (modular architecture) இதை ஒரு வளர்ந்த மேம்பட்ட நிரல் மொழியாக உருமாற்றியது. தற்போது ஏறத்தாழ அனைத்து பெரிய நிறுவனங்களிலும் ஏதேனும் ஒரு வடிவில் இது பயன்படுத்தப்படுகிறது.
இதன் உருவாக்குநர் மற்றும் துவக்க கால பங்களிப்போரின் சாய்வின் விளைவாக இது மனிதர்கள் பயன்படுத்தும் இயல்மொழிகளின் மொழியியலைப் பல இடங்களில் பின்பற்றுகிறது. அணிகள்கூட இதில் உண்டு![5] இதனாலும், "எளிதானவற்றை இன்னும் எளிமையாக்குதல், முடியாதவற்றையும் கூடச் செய்யுதல்" மற்றும் "எதையும் பல வழிகளில் நிறைவேற்றும் வசதி" போன்ற கொள்கைகளினாலும், இது சற்றே மாறுபட்டு நிற்கிறது. பொதுவாக நிரல்மொழிகள் "சொல்வதைச் செய்"யும் மொழிகளாக இருக்குமிடத்தில் பெர்ள் "சொல்ல விழைந்ததைச் செய்"யும் மொழியாக உள்ளது. இந்த நோக்கில் இதில் பல வசதிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக தாமாகவுயிர்ப்பித்தல் போன்ற வசதிகள் பிற நிரல்மொழிகளில் அரிது.
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] மேற்கோள்களும் குறிப்புகளும்
- ↑ Ashton, Elaine (1999). The Timeline of Perl and its Culture (v3.0_0505).
- ↑ Wall, Larry, Tom Christiansen and Jon Orwant (July 2000). Programming Perl, Third Edition. O'Reilly.
- ↑ Usenet post, May 10th 1997, with ID 199705101952.MAA00756@wall.org.
- ↑ லாரி வால்: "பெர்ள் 5-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பகுதிக்கூறு கட்டமைப்பு பெர்ள் பண்பாட்டை வளர்ப்பதற்காவே அன்றி பெர்ள் கருனியை வளர்ப்பதற்கல்ல." ("The whole intent of Perl 5's module system was to encourage the growth of Perl culture rather than the Perl core.") Usenet post, May 10th 1997, with ID 199705101952.MAA00756@wall.org.
- ↑ http://enkirukkal.blogspot.com/2006/09/perl-and-postmodernism.html