பயிர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வேளாண்மைத் துறையில், பயிர் என்பது, உணவு, கால்நடைத் தீவனம் மற்றும் வேறு பொருளியல் நோக்கங்களுக்காகப் பெருமளவில் செய்கை பண்ணப்படும் தாவரத்தைக் குறிக்கும். நெல், கோதுமை, சோளம் போன்றவை உணவுக்காகச் செய்கைபண்ணப்படும் பயிர்கள். பருத்திப் பயிர் ஆடை உற்பத்தித் தொழிலுக்கு மூலப்பொருளான பஞ்சை உற்பத்தி செய்வதற்காகப் பயிரிடப்படுகின்றது. மக்களின் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய புகையிலை போன்ற பயிர்களும் அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய கவர்ச்சிகரமான வருமானம் காரணமாகப் பயிரிடப்பட்டு வருகின்றன.