திருக்கருப்பறியலூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருக்கருப்பறியலூர் - தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. இந்திரன், இறைவன் என்றறியாமல் அவர்மீது வச்சிரம் எறிந்த குற்றத்தைப் பொறுத்தருளியமையால் குற்றம் பொறுத்த நாதர் ஆனார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).