பாடல் பெற்ற தலங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாடல் பெற்ற தலங்கள் எனப்படுபவை தேவாரத் திருமுறைகளைப் பாடிய சமயக் குரவர்களான சம்பந்தர், அப்பர் அல்லது சுந்தரரினால் தேவாரம் பாடப்பட்ட கோயில்கள் ஆகும். 276 தலங்கள் பாடல் பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் இந்தியாவிலேயே அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் மற்றும் (புதுச்சேரி மாநிலம் உட்பட) இவற்றில் 266 சிவஸ்தலங்கள் அமைந்துள்ளன. இலங்கையிலுள்ள திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் ஆகியனவும் பாடல் பெற்ற தலங்களாகும்.