திருக்கண்ணார் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருக்கண்ணார் கோயில் - குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்திரன் வழிபட்டுச் சாபம் நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கையாகும். திருமணாமாகாதோர் இக்கோயிலுக்க்கு வந்து மாலைசாத்தி வழிபடும் வழக்கமுள்ளது. இத்தலத்தின் தலமரம் சரக்கொன்றை.