தாலஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிரேக்க நாட்டில் உள்ள மிலேட்டஸ் என்னும் ஊரைச் சார்ந்த தாலஸ் (கி.மு.624-546) என்பவர், சாக்கிரட்டீஸ்க்கு முன் வாழ்ந்த ஓரு பெரும் அறிஞர். இவரை அறிவியலின் தந்தை என்றும் சிலர் அழைப்பர். இவர் தான் அம்பர் என்னும் பொருளை துணியில் தேய்த்த பின் அது வைக்கோல் துண்டுகளை ஈர்க்கும் திறம் பெறுகின்றது என கண்டுபிடித்தார். அம்பரின் இப் பண்பைப் பற்றி கி.மு. 300களில் வாழ்ந்த பிளாட்டோ என்பாரும் குறித்துள்ளார். மின்சாரத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றான மின் தன்மை இவ்வகைக் கண்டுபிடிப்பில் இருந்து தொடங்கியதாகக் கருதப்படுகின்றது.